எனக்கு ஏன் ஆட்டநாயகன் விருது? அவர்தான் தகுதியானவர் - தோனி சொன்ன பதில்
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 30வது லீக் போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதியது.
ஆட்டநாயகன் விருது
முதலில் துடுப்பாட்டம் ஆடிய லக்னோ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அணித்தலைவர் ரிஷப் பந்த் அதிகபட்சமாக 63 ஓட்டங்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய 167 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் எடுத்து, தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக சிவம் துபே 43 ஓட்டங்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷேக் ரஷீத் 19 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.
இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது தோனிக்கு வழங்கப்பட்டது. தோனி 11 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்ததோடு, ஒரு கேட்ச், ரன் அவுட் மற்றும் ஸ்டம்பிங் என கீப்பிங்கில் அசத்தினார்.
தோனி 6 வருடங்களுக்கு பிறகு, ஆட்டநாயகன் விருதை பெறுகிறார். மேலும், அதிக வயதில் ஆட்ட நாயகன் விருது பெரும் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
நூர் அகமது
தோனி அணித்தலைவராக வெல்லும் 16வது ஆட்ட நாயகன் விருது என்பதோடு, அதிக ஆட்டநாயகன் விருது பெற்றுள்ள அணித்தலைவர் என்ற பெருமையும் வைத்துள்ளார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற பின்னர் பேசிய தோனி, " எனக்கு ஏன் இந்த விருது தருகிறார்கள் என யோசித்தேன். எங்கள் அணியில் நூர் அகமது மிகச்சிறப்பாக பந்துவீசினார்” என கூறினார்.
நூர் அகமது இந்த போட்டியில் விக்கெட் எடுக்கவிட்டாலும், 4 ஓவர்கள் வீசி 13 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |