பாரத் vs இந்தியா சர்ச்சையில் சிக்கிய தோனி! உண்மை என்ன?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் இன்ஸ்டாகிராம் முகப்புப் படம் சர்ச்சையாகியுள்ளது.
பாரத் சர்ச்சை
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இந்தோனேசிய பயணத்தின் நிகழ்ச்சி நிரலில் இந்தியாவுக்கு பதிலாக பாரத் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேபோல் ஜனாதிபதியின் ஜி20 மாநாட்டு அழைப்பிதழிலும் இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என இருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
பாஜக தலைவர்கள், தொண்டர்கள் 'பாரத்' என்ற பெயருக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், பிற கட்சியினர், தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் எம்.எஸ்.தோனியின் இன்ஸ்டாகிராம் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. இதற்கு காரணம் அதில் தேசியக் கொடியுடன் I am blessed to be a Bharatiya என உள்ளது தான்.
இதன் வாயிலாக தோனி மத்திய அரசின் பெயர் மாற்றத்திற்கு ஆதரவு அளிக்கிறார் என்று சமூக ஊடங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
Social Media
உண்மை என்ன?
ஆனால், கடந்த ஆகத்து 15ஆம் திகதி சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது 'பாரத்' என்ற சொல் இடம்பெற்ற இந்த படத்தை தோனி மாற்றியிருந்தார்.
எனவே அவர் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று தோனியின் ரசிகர்களும், ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர்.
தோனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 4.5 கோடிக்கும் அதிகமான பின்பற்றுபவர்களை கொண்டுள்ளார். மேலும் அவர் தனது சொந்த விடயங்களை மட்டுமே அதில் பகிர்ந்து வருகிறார்.
Sportzpics / IPL
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |