தனது மகளுடன் புத்தாண்டை கொண்டாடிய டோனி! இணையத்தில் வைரலாகும் வீடியோ
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டோனி, தனது மகள் ஜிவாவுடன் குதூகலமாக புத்தாண்டை கொண்டாடியுள்ளார்.
2023 புத்தாண்டு கொண்டாட்டம்
உலகம் முழுவதும் 2023 புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று இரவு பல்வேறு நாடுகளில் மக்கள் புத்தாண்டை கொண்டாடி வரவேற்றனர்.
இந்த நிலையில், மகேந்திர சிங் டோனி தனது மகள் ஜிவாவுடன் புத்தாண்டை கொண்டாடினார்.
வைரலாகும் டோனியின் வீடியோ
இதுதொடர்பான வீடியோவை டோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அத்துடன் Happy New Year 2023 என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் டோனி வாணவேடிக்கைப் பார்த்தவாறு மகள் ஜிவாவை கொஞ்சி மகிழ்கிறார்.
டோனியின் ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.