அறுவை சிகிச்சைக்கு முன் கையில் பகவத் கீதையோடு சென்ற தோனி - வைரலாகும் புகைப்படம்
அறுவை சிகிச்சைக்கு முன் கையில் பகவத் கீதையோடு சென்ற தோனியின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மூட்டு வலியில் தோனி
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இதனையடுத்து களத்தில் இறங்கிய சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி மாபெரும் சாதனைப் படைத்தது.
ஆனால், இந்த ஐபிஎல் தொடரில் தோனிக்கு முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டு வலியால் அவதிப்பட்டாலும், வலியை பொருட்படுத்தாமல் சிரமப்பட்டு தன் அணி வெற்றிக்காக போராடி வெற்றி கோப்பை பெற்று சாதனைப் படைத்தார்.
தோனிக்கு ஆபரேஷன்
முழங்கால் வலிக்காக மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் தோனி சிகிச்சை எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தின்ஷா பர்திவாலா தோனிக்கும் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார். இதன் காரணமாக சிறிது காலம் தோனி ஓய்வில் இருக்கப்போகிறாராம்.
இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு தோனி பழைய வேகத்தில் ஓடுவதற்கு 2 மாதங்களாகுமாம். தற்போது, தோனிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருப்பதை சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதி செய்திருக்கிறார்.
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், மும்பையில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு முன் தோனி கையில் பகவத் கீதையை வைத்துக் கொண்டு காரில் சென்றார். பின்னர், அவர் மருத்துவமனையில் சென்ற புகைப்படங்களும் சமூகவலைத் தளங்களில் வெளியாகியுள்ளது.
MS Dhoni reading the Bhagavad Gita. pic.twitter.com/lla0rtWWkX
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 1, 2023