நல்ல தொடக்கம் அமையவே இல்லை... - தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி விளக்கம்
துடுப்பாட்டத்தில் நல்ல தொடக்கம் அமையவே இல்லை என்று சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து கேப்டன் தோனி விளக்கம் கொடுத்துள்ளார்.
ராஜஸ்தானிடம் சுருண்டு வீழ்ந்த சென்னை
தற்போது 16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பல மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று ஜெய்ப்பூரில் இருக்கும் சவாய் மான்சிங் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின.
இப்போட்டியில் முதலில் ராஜஸ்தான் அணி துடுப்பாட்டத்தில் இறங்கியது. இதன் பின் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சேர்த்தது.
203 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களத்தில் இறங்கியது. ஆனால், இப்போட்டியில் சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்களை சேர்த்தது. இதனால், ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி வெற்றி பெற்றது.
கேப்டன் தோனி விளக்கம்
இந்நிலையில், தோல்வி குறித்து சி.எஸ்.கே. அணி கேப்டன் தோனி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
துடுப்பாட்டம் செய்தபோது முதல் 6 ஓவர்களில் அதிக ரன்களை எடுத்தோம். ஆடுகளமும் ராஜஸ்தான் துடுப்பாட்டத்திற்கு சாதகமாகவே அமைந்தது. இதனால், அவர்களுக்கு நிறைய ஓட்டங்கள் கிடைத்து விட்டது.
பந்து வீச்சாளர்களும் நன்றாகவே பந்தை வீசினார்கள். இப்போட்டியில் அதிக ரன் இலக்காக இருந்தது. பவர் ப்ளேயில் சென்னை வீரர்கள் நன்றாக விளையாடி இருக்க வேண்டும். ஆனால், துடுப்பாட்டத்திலும் நல்ல தொடக்கம் அமையவே இல்லை என்று தெரிவித்துள்ளார்.