அச்சு அசல் தோனி போல் மாறிய பெண் - வைரலாகும் வீடியோ
அச்சு அசல் தோனி போல் மாறிய பெண்ணின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஐபிஎல் போட்டியில் சாதனை படைத்த தோனி
10 அணிகள் பங்கேற்று விளையாடும் 16-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு இந்த ஐபிஎல் போட்டி கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதிக் கொண்டன. அப்போட்டியில், சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.
ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் வாஷிங்டன் சுந்தர் துடுப்பாட்டம் செய்தபோது, மிக விரைவாக தோனி ரன்அவுட் செய்தார். இதன் மூலம் அதிக ரன் அவுட் செய்த சாதனையை தோனி படைத்துள்ளார்.
அச்சு அசல் தோனி போல் மாறிய பெண்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், டெல்லியைச் சேர்ந்த மேக்கப் கலைஞரான தீக்ஷிதா ஜிண்டால் என்பவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், சென்னை சூப்பர் கிங்ஸ் தோனியைப் போல் மேக்கப் செய்து அப்படியே அச்சு அசல் தோனி போல் மாறியுள்ளார்.
தற்போது இது தொடர்பாக வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த தோனியின் ரசிகர்கள் ஆச்சரியத்தில் அசந்துப்போய் லைக்குகளை அள்ளி தெறித்து வைரலாக்கி வருகின்றனர்.