என்னை ரசிகர்கள் மஞ்சள் படையுடன் பின்தொடர்வார்கள்... - மனம் திறந்த தோனி
என்னை ரசிகர்கள் மஞ்சள் படையுடன் பின்தொடர்வார்கள் நினைக்கிறேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மனம் திறந்து பேசியுள்ளார்.
முதலிடத்தில் தோனி
16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பல மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தோனியைப் பொறுத்தவரை இந்த ஐபிஎல் போட்டி அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், வெற்றி கோப்பையுடன் ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் விடை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் விளாசிய இந்திய வீரர்களில் சென்னை அணியின் கேப்டன் தோனி முதலிடத்தில் இருந்து வருகிறார்.
நேற்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின. இப்போட்டியில், ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
மனம் திறந்த தோனி
இந்நிலையில், என்னை ரசிகர்கள் மஞ்சள் படையுடன் பின்தொடர்வார்கள் நினைக்கிறேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
என்னை ரசிகர்கள் இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் மஞ்சள் படையுடன் பின்தொடர்வார்கள் என்று நினைக்கிறேன். ஜெய்ப்பூர் எனக்கு பிடித்தமான நகரம். நான் முதன் முதலாக ODI சதம் வைசாக் மைதானத்தில் நிகழ்த்தினேன்.
இந்த மைதானம் என் மனதுக்கு நெருக்கமான இடம். அது எனக்கு மேலும் 10 ஆட்டங்கள் ஏற்படுத்திக் கொடுத்தது. நான் ஜெய்ப்பூரில் எடுத்த 183 ஓட்டங்கள் ஒரு வருடத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது என்றார்.