அவரு எங்க போனாலும் சுற்றி சென்னை ரசிகராகவே இருக்காங்க.. - வருண் சக்கரவர்த்தி நெகிழ்ச்சி!
தோனி எங்க போனாலும் அங்க சென்னை ரசிகர்கள்தான் இருக்கிறார்கள் என்று வருண் சக்கரவர்த்தி நெகிழ்ச்சியாக கருத்து தெரிவித்துள்ளார்.
தோனியின் ஆடும் கடைசி தொடர்
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனிக்கு இந்த ஐபிஎல் போட்டிதான் கடைசி தொடராக இருக்கப்போகிறது. ஆதலால் வெற்றி கோப்பையுடன் ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் தோனி விடை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில், நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் விளாசிய இந்திய வீரர்களில் சென்னை அணியின் கேப்டன் தோனி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
அதேபோல், ஐதராபாத் அணிக்கு எதிராக வாஷிங்டன் சுந்தர் துடுப்பாட்டம் செய்தபோது, மிக விரைவாக தோனி ஓட்டம் அவுட் செய்தார். இதன் மூலம் அதிக ஓட்டம் அவுட் செய்த சாதனையை தோனி படைத்துள்ளார்.
வருண் சக்கரவர்த்தி நெகிழ்ச்சி உரை
நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில், பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி வீரர் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
தற்போது இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியைப் பற்றி நெகிழ்ச்சி உரை ஆற்றியுள்ளார்.
இது குறித்து வருண் சக்கரவர்த்தி பேசுகையில், ‘தோனியை பார்க்கும்போது எப்போதும் எனக்கு பிரமிப்பாகவே இருக்கும். அவர் கொல்கத்தாவிற்கு வந்தாகூட அங்கு முழுவதும் சென்னை ரசிகர்கள்தான் இருக்கிறார்கள். தோனி எங்க போனாலுமே முழுசா மஞ்சள் நிறமா மாற்றிவிடுகிறார். அந்த மாதிரி யாராலும் முடியாது என்று நெகிழ்ச்சியாக பேசினார்.