நாங்க தோற்றதற்கு இதான் காரணம்! வெறுத்து போய் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி
ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியுடன் தோல்வியடைந்தது குறித்து சென்னை கேப்டன் தோனி மனம் திறந்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 13 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோற்றது. தோல்வி குறித்து சென்னை அணி கேப்டன் தோனி கூறுகையில், நாங்கள் அவர்களை 170 ரன்னுக்கு கட்டுப்படுத்தியது நன்றாக இருந்தது.
உண்மையில் எங்களை வீழ்த்தியது பேட்ஸ்மேன்ஷிப். இலக்கை சேசிங் செய்யும்போது ரன் எவ்வளவு தேவை, பந்து வீச்சாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
2 ரன்னில் தோனி அவுட்டானதை வெறித்தனமான ஆக்ரோஷத்துடன் கொண்டாடிய கோலி மீது விமர்சனம்! வைரல் வீடியோ
சில சமயங்களில் உங்கள் உள்ளுணர்வை கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் ஷாட்டை விளையாடுவதை விட நிலைமை என்ன கேட்கிறது என்பதை பார்க்க முயற்சிக்க வேண்டும். பேட்ஸ்மேன்ஷிப் சற்று சிறப்பாக இருந்திருந்தால் கடைசி சில ஓவர்களில் எங்களுக்கு அதிக ரன் தேவைப்பட்டிருக்காது.
நாங்கள் நல்ல தொடக்கத்தை பெற்றோம். அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்து கொண்டே இருந்தோம்,இதான் பின்னடைவுக்கு காரணம்.
இந்த விஷயங்களை நீங்கள் கவனித்து கொண்டால் சேசிங் என்பது கணக்கீடாகவும், முதலில் பேட்டிங் செய்வது உள்ளுணர்வு பற்றியதாகவும் இருக்கும் என கூறியுள்ளார்.