என்றுமே தோனி ராஜா தான்! ஐபிஎல் போட்டியில் செய்த சூப்பர் சாதனை... வீடியோ காட்சி
ஐபிஎல் போட்டிகளில் சேஸிங்கில் பெரிய சாதனை ஒன்றுக்கு தோனி சொந்தக்காரராக இருப்பது தெரியவந்துள்ளது.
சிஎஸ்கே - மும்பை மோதிய சமீபத்திய போட்டியில் தோனி கடைசி 4 பந்தில் 16 ரன்கள் விளாசி சிஎஸ்கேக்கு வெற்றியை பெற்று தந்தார்.
இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 20வது ஓவரில் 51 சிக்சர் விளாசி தோனி சாதனை படைத்தார். இந்த நிலையில், செஸிங்கில் 20வது ஓவரில் 15 ரன்கள் மேல் இருக்கும் இலக்கை வெற்றிக்கரமாக துரத்திய வீரர்கள் யார் என்பது குறித்த விபரம் தெரியவந்துள்ளது.
#MSDhoni? #msd4ever
— Dr Azad Singh (@DrAzadSingh007) April 21, 2022
More than #dhoni, bowlers are under pressure in last over against him!!!
That's the power of this 41years old fella!!!#GOAT? for a reason!!! pic.twitter.com/xKK0wcpoS9
அதன்படி 15 ரன்களுக்கு மேல் சேஸிங்கை மூன்று முறை வெற்றிகரமாக நிகழ்த்தி காட்டியிருக்கிறார் தோனி.
டிவில்லியர்ஸ் ஒரு முறையும், ரோகித் சர்மா ஒரு முறையும், பொலார்ட் ஒரு முறையும் கடைசி ஓவரில் 15 ரன்களுக்கு மேல் துரத்தியுள்ளனர்.
தோனி மட்டுமே 3 முறை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.