CSK பெளலிங்கில் என்ன பிரச்சனை..!பஞ்சாப் அணியுடனான தோல்விக்கு பிறகு தோனி பேச்சு
எங்கள் பிரச்சனை திட்டத்திலா அல்லது அதை நடைமுறைப்படுத்துவதிலா என்பதை பார்க்க வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
தோல்வியை தழுவிய CSK
இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இதில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 200 ஓட்டங்கள் குவித்தது, CSK அணியில் டெவோன் கான்வே அதிரடியாக 92 ஓட்டங்கள் குவித்தார்.
Raza and @PunjabKingsIPL stun #CSK with the highest-ever #TATAIPL chase at Chepauk by an away side ?#CSKvPBKS #IPLonJioCinema #TATAIPL #IPL2023 pic.twitter.com/FCZWvFFDFM
— JioCinema (@JioCinema) April 30, 2023
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 201 ஓட்டங்கள் குவித்து த்ரில் வெற்றியை கைப்பற்றியது.
ஆட்டத்தின் கடைசி பந்தில் 3 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், பதிரானா வீசிய பந்தை ராசா பவுண்டரி கோட்டிற்கு விரட்டியடித்தார், அதை சென்னை அணி வீரர்கள் மடக்கி பிடித்து இருந்தாலும் வெற்றிக்கு தேவையான ஓட்டங்கள் பஞ்சாப் அணி வீரர்கள் வெற்றிகரமாக ஓடி எடுத்தார்கள்.
தவறை கண்டறிய வேண்டும்
இந்நிலையில் போட்டிக்கு பிறகு தொகுப்பாளரிடம் பேசிய சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அணியின் பெளலிங்கில் ஏற்படும் பிரச்சனை எங்கள் திட்டத்திலா அல்லது அதை போட்டியில் நடைமுறைப்படுத்துவதிலா என்பதை பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் பதிரானா மிகவும் சிறப்பாக பந்துவீசி வருவதாக குறிப்பிட்ட தோனி, அடுத்த போட்டியில் பவர் பிளே பெளலிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.