தோனி மனசுல என்ன இருக்குன்னு தெரியுமா? - சுரேஷ் ரெய்னா ஓபன் டாக்
ஓய்வு குறித்து தோனி என்னிடம் ஒன்றை கூறினார் என்று இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஐபிஎல் சீசனில் பட்டையை கிளப்பும் தோனி
16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் தோனிக்கு இந்த ஐபிஎல் போட்டி தான் கடைசி போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தோனி ரசிகர்களும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தோனி இன்னும் சில வருடங்கள் விளையாட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.
சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. ஆனால், அந்த வலிகளையும் பொறுத்துக் கொண்டு தோனி சிறப்பாக விளையாடி வருகிறார். பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் விளாசிய இந்திய வீரர்களில் சென்னை அணியின் கேப்டன் தோனி முதலிடத்தில் இருந்து வருகிறார்.
சமீபத்தில் தோனி பேசும்போது, இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் என்னை ரசிகர்கள் மஞ்சள் படையுடன் பின்தொடர்வார்கள் என்றார். தோனி இந்த ஐபிஎல் சீசன் முடிந்ததும் விடை பெற்றுவிடுவாரோ என்று சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்களுக்கு, திடீரென்று லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் 'இது எனது கடைசி ஐபிஎல் சீசன் என நான் சொல்லவில்லை' என்று வர்ணனையாளரிடம் தெரிவித்து ரசிகர்களை இன்ப கடலில் மூழ்கடித்தார்.
சுரெஷ் ரெய்னா ஓபன் டாக்
இந்நிலையில், தோனியின் ஓய்வு குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், நான் சென்னை-மும்பை ஆட்டத்தின்போது தோனியை சந்தித்து பேசினேன்.
அப்போது தோனி என்னிடம் ஒன்றை கூறினார்.
ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு இன்னும் ஒரு வருடத்திற்கு விளையாடுவேன் என்றார். தோனி சென்னை அணிக்காக 5-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முடிவு செய்து விட்டார் என்றார்.