நீங்கள் வீடு போய் சேர்ந்த பின்னரே நான் கிளம்புவேன்! வீடியோ அழைப்பில் நெகிழ வைத்த டோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனி டோனி செய்துள்ள ஒரு செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து அனைத்து வீரர்களையும் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேச வீரர்கள் தாய் நாட்டிற்கு கிளம்பிவிட்டனர். இந்திய வீரர்களுக்காக் மும்பை, சென்னை, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தனி விமானம் ஏற்பாடு செய்துள்ளன.
ராஜஸ்தான், கொல்கத்தா, ஐதராபாத் அணி வீரர்கள் பொதுமக்கள் பயணிக்கும் விமானங்கள் மூலமாக வீடுகளுக்கு சென்றனர்.
இந்நிலையில் சிஎஸ்கே அணியில் அனைத்து வீரர்களும், ஊழியர்களும் வீட்டிற்கு சென்று சேர்ந்தவுடன் தான், நான் வீட்டிற்கு கிளம்புவேன் டோனி தெரிவித்துள்ளார்.
அயல்நாட்டு வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்குதான் விமானங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் இந்திய வீரர்கள் அதன்பின்னர் செல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அணி வீரர்களுடன் டோனி வீடியோ அழைப்பின் மூலம் பேசியுள்ளார். அதில் அயல்நாட்டு வீரர்கள் முதலில் கிளம்பிய பிறகு இந்திய வீரர்கள் விமானங்களில் ஏற வேண்டும்.
அனைத்து வீரர்களும் பாதுகாப்பாக வீடுகளுக்கு சென்ற செய்தியை கேட்ட பிறகு தான், ஹொட்டலில் இருந்து நான் கிளம்பி கடைசி ஆளாக விமானம் ஏறுவேன் என திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது.
அனைத்து வீரர்களும் வீடுகளுக்கு சென்ற பிறகு, நாளை மாலை தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு செல்ல டோனி விமானம் ஏறவுள்ளார்.