கேப்டன்சியில் தோனி போல் என்னால் முடியாது... டு பிளெசிஸ் பேட்டி!
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியின் கேப்டனாக தென்-ஆப்பிரிக்கா வீரர் டு பிளெசிஸை நியமித்ததை தொடர்ந்து, தோனியை போல் என்னால் கேப்டன்ஷிப் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.
2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் கடந்த மாதம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடந்து முடிந்த நிலையில், கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பிரபல தென்-ஆப்பிரிக்கா வீரர் டு பிளெசிஸை பெங்களூரு அணி ஏலத்தில் 7 கோடிக்கு தட்டி சென்றது.
இந்த நிலையில், பெங்களூரு அணியின் கேப்டன் பதிவியில் இருந்து விராட் கோலி விலகிய பிறகு, அந்த அணிக்கான கேப்டனை தேர்ந்தெடுப்பதில் பெரும் குழப்பத்தில் இருந்த பெங்களூரு அணி இறுதியாக முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மற்றும் தென்-ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டனான ஃபாஃப் டு பிளெசிஸை கேப்டனாக அந்த அணி நிர்வாகம் நியமித்துள்ளது.
இதையடுத்து, டு பிளெசிஸிடம் RCB நடத்திய நேர்காணலில், கடந்த 10 ஆண்டுகளாக தோனி தலைமையில் பணியாற்றியது குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் 2011ம் ஆண்டு சென்னை அணிக்காக விளையாட தொடங்கும் போது கேப்டன்ஷிப் குறித்த எனது எண்ணங்கள் முற்றிலுமாக வேறுபட்டதாக இருந்தது, நான் பார்த்தது கற்றது எல்லாம் தென்-ஆப்பிரிக்க ஸ்டைல் கேப்டன்ஷிப் முறையே, ஆனால் தோனி தலைமையில் ஆன கேப்டன்ஷிப் முறை எனக்கு முற்றிலும் எதிர்மறையாக இருந்தது.
சென்னை அணி எனக்கு கற்பித்தது எல்லாம் கேப்டன்சி முறைகளில் பல்வேறு பாணிகள் உள்ளது என்பதே. இவற்றில் முக்கியமானது என்னவென்றால் கேப்டன்சி என்பது தனித்துவமான சொந்த பாணியில் இருக்க வேண்டும் அதுவே போட்டிகளில் அழுத்தம் ஏற்படும் போது நம்மிடம் இருந்து வெளிப்படும்.
அதனால் என்னால் எப்போதும் விராட் கோலியாகவோ, எம்எஸ் தோனியாகவோ இருக்க முடியாது, இதனை ஆண்டுகால கிரிக்கெட்டில் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் எனது தலைமைத்துவ பாணியை வளர்க்கவும் முதிர்ச்சியடையவும் உதவி உள்ளது. எனவே, அந்த பயணத்திற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இன்னும் 30 வருடம் வாழ நினைத்த ஷேன் வார்ன்! ஆலோசகர் சோகம்