இன்னும் 30 வருடம் வாழ நினைத்த ஷேன் வார்ன்! ஆலோசகர் சோகம்
கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் இறப்பதற்கு முன், இன்னும் 30 வருடங்களுக்கு வாழுவோம் என நினைத்துக்கொண்டிருந்ததாக அவரது ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் கடந்த மார்ச் 4-ஆம் திகதி தாய்லந்தில் Koh Samui-ல் உள்ள தனது வில்லாவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருடன் தங்கியிருந்த அவரது நண்பர்கள் அவரை உயிர்ப்பிக்க பல முயற்சிகள் மேற்கொண்டபோது, இவ்வித பலனுமின்றி உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனையில் 52 வயதான வார்ன் 'இயற்கை காரணங்களால்' தான் உயிரிழந்துள்ளார் என்பது உறுதிசெய்யப்பட்டது.
அவரது மரணத்தில் பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. அவர் உயிரிழந்த அன்று அவரது வில்லாவுக்கு 4 மசாஜ் பெண்கள் வந்து சென்றுள்ளனர். அதற்கான ஆதார புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து, சந்தேகத்திப்பேரில் அதில் இரண்டு மசாஜ் பெண்களை அழைத்து தாய்லாந்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஆலோசகர் லியான் யங் சோகம்
இந்நிலையில், வார்னுக்கு 2015 முதல் உறவு ஆலோசனைகள் வழங்கிவந்த 47 வயதாகும் ஆலோசகர் லியான் யங் (Lianne Young), ஷேன் வார்ன் தன்னிடம் கூறியதாக சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஷேன் வார்ன் இன்னும் குறைந்தது 30 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று நினைத்ததாகவும், இறப்பதற்கு முன்பு ஒருவருடன் செட்டிலாக விரும்புவதாக தன்னிடம் கூறியதாக ஆலோசகர் கூறினார்.
அவுஸ்திரியசுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு 'உடல்நலக் கவலைகள் எதுவும் இல்லை' என்றும், கடைசியாக அவருடன் பேசியபோது 'அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்' என்றும் லியான் யங் கூறினார்.
ஆனால் அவரது மரணம் ஒரு பயங்கரமான அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக யங் கூறினார். வார்ன் எதிர்காலத்திற்கான திட்டங்களைத் தயாரித்து வருகிறார் என்பதை வெளிப்படுத்தினார்.
'எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அவர் மூன்று மாதங்கள் விடுமுறைக்கு முன்பதிவு செய்திருந்தார், மேலும் அவர் நேசித்த குழந்தைகளுடன் நேரத்தை செலவிட ஆவலுடன் காத்திருந்தார்' என்று அவர் கூறினார்.
நீச்சல் குளத்தில் தவறி விழுந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்! அடக்க முடியாமல் சிரித்த சக வீரர்கள்..
