8 சிக்ஸர்களுடன் 160 ஓட்டங்கள்! விஜய் ஹசாரே போட்டியில் துருவ் ஜுரேல் சரவெடி
விஜய் ஹசாரே போட்டியில் உத்தர பிரதேச வீரர் துருவ் ஜுரேல் 160 ஓட்டங்கள் விளாசினார்.
கோஸ்வாமி, ரிங்கு சிங் அரைசதம்
ராஜ்கோட்டில் உத்தர பிரதேசம் மற்றும் பரோடா அணிகளுக்கு இடையிலான விஜய் ஹசாரே போட்டி நடந்து வருகிறது.
இதில் உத்தர பிரதேச அணி முதலில் துடுப்பாடியது. ஆர்யன் ஜூயல் 26 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த கோஸ்வாமி 51 (51) ஓட்டங்களில் வெளியேறினார்.
பிரியம் கார்க் (3) விரைவில் அவுட் ஆக, துருவ் ஜுரேல் மற்றும் ரிங்கு சிங் ஆகிய இருவரும் வலுவான கூட்டணி அமைத்தனர்.
துருவ் ஜுரேல் ருத்ர தாண்டவ சதம்
அணித்தலைவர் ரிங்கு சிங் (Rinku Singh) அதிரடியாக 67 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் சிக்ஸர் மழைபொழிந்த துருவ் ஜுரேல் சதம் அடித்தார். அதன் பின்னர் அவர் ருத்ர தாண்டவம் ஆட, உத்தர பிரதேச அணி 369 ஓட்டங்கள் குவித்தது.
இறுதிவரை களத்தில் நின்ற துருவ் ஜுரேல் (Dhruv Jurel) 101 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 160 ஓட்டங்கள் விளாசினார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |