ருத்ரதாண்டவம் ஆடிய ரிஷாப் பண்ட்! இரண்டாவது இன்னிங்ஸிலும் சதமடித்த துருவ் ஜுரெல்
தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான டெஸ்டில் துருவ் ஜுரெல் மீண்டும் சதம் விளாசியுள்ளார்.
பண்ட் ருத்ரதாண்டவம்
பெங்களூருவில் நடந்து வரும் டெஸ்டில் இந்தியா ஏ, தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் மோதி வருகின்றன.
Old Bat Swing, Specially Against Pacers 🔥🔥🔥
— PANT पुजारी (@PantArmy17) November 8, 2025
2018 RISHABH PANT IS BACK ❤️🔥#RishabhPant #INDvsAUSpic.twitter.com/YvWlWkdRQ1
இந்தியா முதல் இன்னிங்ஸில் 255 ஓட்டங்களும், தென் ஆப்பிரிக்கா 221 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் ராகுல் 27 ஓட்டங்களும், சாய் சுதர்சன் 23 ஓட்டங்களும், படிக்கல் 24 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அணித்தலைவர் ரிஷாப் பண்ட் (Rishabh Pant) சிக்ஸர்களை பறக்கவிட்டு ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 54 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் விளாசினார்.
மறுமுனையில் நங்கூர ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஜுரெல் (Dhruv Jurel) இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் விளாசினார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ஹர்ஷ் தூபே அரைசதம் அடித்தார்.
Two centuries in two innings for Dhruv Jurel, he’s just unstoppable! 🔥
— OneCricket (@OneCricketApp) November 8, 2025
PC: Jiostar#DhruvJurel #RishabhPant #century #TeamIndia #INDAvsSAA pic.twitter.com/3LXupPSci7
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |