யானைக்கு பயந்து ஊரை காலிசெய்த குடும்பம்... 14 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிவந்த யானை செய்த கொடூர செயல்
நேபாளத்தில், 2012ஆம் ஆண்டு ஒரு தம்பதியரை யானை ஒன்று மிதித்துக்கொன்றது.
யானைக்கு பயந்து அந்தக் குடும்பம் ஊரை விட்டே ஓடிய நிலையில், 14 ஆண்டுகளுக்கு முன் திரும்பிவந்த அந்த யானை அதே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு பேரைக் கொன்றுள்ள விடயம் திகிலை உருவாக்கியுள்ளது.
யானைக்கு பயந்து ஊரை விட்டு ஓடிய குடும்பம்...
நேபாளத்திலுள்ள மாடி என்னும் ஊரில் வாழ்ந்துவந்துள்ளது ஷானிச்சாரா போடே (Shanichara Bote) என்பவரின் குடும்பம்.

2012ஆம் ஆண்டு, துர்பே என்னும் யானை போடேயின் பெற்றோரை மிதித்துக் கொல்ல, பயந்துபோன போடே குடும்பம், ரப்தி என்னும் ஆற்றைக் கடந்து மறுபக்கம் இருக்கும் ஜகத்பூர் எனும் ஊரில் குடியேறியுள்ளது.
இந்நிலையில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் போடே குடும்பத்தைத் தேடிவந்த துர்பே, இந்த மாதத்தின் துவக்கத்தில் போடேயின் மருமகளான ஆஷிகா போடேயையும் (25) பேரனான பரத் போடேயையும் (4) மிதித்துக் கொன்றுவிட்டது.
அந்த யானைக்கு பயந்துதான் ஊரை விட்டே வந்தோம். ஆறு குறுக்கே இருப்பதால் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால், 14 ஆண்டுகளுக்குப் பிறகு அதே யானை என் மருமகளையும் பேரனையும் கொன்றுவிட்டது. இனி எங்கே ஓடுவது என்று எனக்குத் தெரியவில்லை என்கிறார் போடே.
விடயம் என்னவென்றால், போடேயின் மருமகள், பேரனை சேர்த்து, இதுவரை துர்பே யானை, 25 பேரைக் கொன்றுள்ளது.
எதனால் அந்த யானை இப்படி மனித வேட்டையாடுகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.
காடுகளை மனிதன் ஆக்கிரமிப்பதால் இப்படி யானைகள் ஊருக்குள் வந்து மனிதர்களைக் கொல்வதாக நம்பப்பட்டாலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை, அதுவும் 14 ஆண்டுகளுக்குப் பின் தேடிவந்து அந்த யானைக் கொன்றது ஏன் என்பதற்கு யாராலும் விளக்கம் கொடுக்கமுடியவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |