சர்க்கரை நோயாளிகள் என்னென்ன பழங்களை சாப்பிட வேண்டும்ன்னு தெரியுமா? இதோ
இன்றைய காலக்கட்டத்தில் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் கார்ப்போஹைட்ரேட் உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அப்படி அவர்கள் கார்போஹைட்ரேட் அதிகளவில் எடுத்துக் கொள்ளும்போது, அவர்களின் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இது காலப்போக்கில், நரம்பு மண்டலத்தை பாதிக்கும். இதய நோய் உட்பட பல நோய் வர காரணமாகி விடும். சர்க்கரை நோயாளிகளின் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால் அவர்களின் விழித்திரைகள் பாதிக்கக்கூடும்.
சர்க்கரை நோயாளிகள் பழங்களை சாப்பிட வேவண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால், அவர்களால் எல்லா பழங்களையும் சாப்பிட முடியாது. ஏனென்றால், பழங்களில் உள்ள இனிப்புத்தன்மை அவர்களின் சர்க்கரை அளவை அதிகரித்து விடும் என்று அஞ்சுவார்கள்.
அப்படிப்பட்ட சர்க்கரை நோயாளிகள் கீழ்காணும் 5 பழங்களை நன்றாகவே சாப்பிடலாம். அவை என்னென்ன பழங்கள் என்று பார்ப்போம் -
ஆப்பிள்
சர்க்கரை நோயாளிகள் ஆப்பிள் பழங்களை நன்றாக சாப்பிடலாம். தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் டைப் 2 நீரிழிவு நோய் தாக்குதலிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
முலாம்பழம்
சர்க்கரை நோயாளிகள் முலாம்பழத்தை சாப்பிடலாம். இப்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் உள்பட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால், சர்க்கரை நோயாளிகள் முலாம்பழத்தை தைரியமாக சாப்பிட்டு வரலாம்.
ஆரஞ்சு
சர்க்கரை நோயாளிகள் ஆரஞ்சு பழத்தை சாப்பிடலாம். இதில் உள்ள சிட்ரஸ் மற்றும் நார்ச்சத்து இரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சுதலை குறைத்து விடும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
அவகோடா
அவகோடா பழங்களை சர்க்கரை நோயாளிகள் தினமும் சாப்பிட்டு வரலாம். அவகடோ பழங்களில் கொழுப்புச் சத்து உள்ளது. எண்ணற்ற வைட்டமின்களை கொண்டுள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து நீரிழிவு அபாயத்தை குறைத்து விடும்.
பப்பாளி
சர்க்கரை நோயாளிகள் பப்பாளி பழங்களை நன்றாக சாப்பிடலாம். பப்பாளி பழத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் நீரிழிவு நோயிலிருந்து பாதுகாக்கும். நீரிழிவு நோய்களின் செல்களை அழிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |