1000 ஆண்டுகள் சக்தி வழங்கும் வைர பற்றரிகள்! செயல்பாடு மற்றும் பயன்கள் என்னென்ன?
உலகை மாற்றும் புதிய தொழில்நுட்பமாக, ஆயிரம் ஆண்டுகள் வரை நீடிக்கும் பற்றரியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
வைர பற்றரி
ரிஸ்டல் பல்கலைக்கழகம் மற்றும் UK அணுசக்தி ஆணையம் இணைந்து, கார்பன்-14 என்ற தனிமத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த வைர பற்றரி (diamond battery), பல்வேறு துறைகளிலும் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
💎Scientists and engineers from the UK Atomic Energy Authority (@UKAEAofficial) and the University of Bristol (@BristolUni) have successfully created the world’s first carbon-14 diamond battery.
— UK Atomic Energy Authority (@UKAEAofficial) December 4, 2024
This new type of battery has the potential to power devices for thousands of years,… pic.twitter.com/Kquxpn1PHA
எப்படி இது செயல்படுகிறது?
தொல்லியல் ஆய்வுகளில் பொருள்களின் வயதை கணக்கிட பயன்படும் கார்பன்-14 இன் கதிரியக்க சிதைவு தான் இந்த பற்றரியின் ஆற்றலுக்கு மூலாதாரம் ஆகும்.
சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் சோலார் பேனலைப் போல, இந்த பற்றரி கதிரியக்க சிதைவின் போது வெளிப்படும் எலக்ட்ரான்களை மின்சாரமாக மாற்றுகிறது.
இந்த எலக்ட்ரான்கள் வைரத்தின் உள்ளே சிக்கிக் கொள்வதால், நீண்ட காலத்திற்கு தொடர்ந்து மின்சாரத்தை வெளிப்படுத்துகின்றன.
ஏன் வைரம்?
வைரம் கதிரியக்க கதிர்வீச்சை உறிஞ்சிக்கொள்ளும் தன்மை கொண்டது. இதனால், பற்றரி பாதுகாப்பான முறையில் குறைந்த அளவிலான மின்சாரத்தை நீண்ட காலத்திற்கு உற்பத்தி செய்கிறது.
கார்பன்-14 இன் அரை ஆயுட்காலம் 5,700 ஆண்டுகள் என்பதால், இந்த பற்றரி ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் கூட செயல்படும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய பயன்கள்
இதய பேஸ்மேக்கர், செவிப்புலன் கருவிகள் போன்ற மருத்துவ கருவிகளில் இந்த பற்றரிகளைப் பயன்படுத்துவதன் மூலம், அடிக்கடி பற்றரி மாற்ற வேண்டிய அவசியம் நீங்கும்.
செயற்கைக்கோள்கள், விண்கலங்கள் போன்ற விண்வெளித் திட்டங்களில் இந்த பற்றரிகளைப் பயன்படுத்தலாம்.
மின்சாரம் கிடைக்காத தொலைதூர இடங்களில் இந்த பற்றரிகள் பெரிதும் உதவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |