அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பீதியடைந்த மக்கள்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், அப்பகுதி மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது.
அமெரிக்காவில் நிலநடுக்கம்
அமெரிக்காவின் மேற்கு கடற்கரை மாநிலமான கலிபோர்னியாவில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பொதுமக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், அரிதாகவே நிகழும் ஒரு நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH : Video footage of the moment when a 7.0 magnitude earthquake struck Northern California.#California #earthquakecalifornia #Earthquake #TsunamiWarning #TsunamiAlert #Tsunami #UnitedStates #USA #Californiatsunami #californiaquake #CaliforniaEarthquake pic.twitter.com/38ZTGaDgk6
— upuknews (@upuknews1) December 6, 2024
பெர்ன்டேலின் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியின் 100 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கி, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
சுனாமி எச்சரிக்கை
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பொதுமக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
இருப்பினும், பெரிய அளவிலான கடல் கொந்தளிப்பு ஏற்படாததால், சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |