லண்டனில் இளவரசி டயானா பெயர் கொண்ட உணவகத்தின் உரிமம் ரத்து
லண்டனில் இயங்கிவந்த, இளவரசி டயானா பெயர் கொண்ட உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இளவரசி டயானா பெயர் கொண்ட உணவகம்
மேற்கு லண்டனில், Café Diana என்னும் உணவகம் ஒன்று 36 ஆண்டுகளாக இயங்கிவந்த நிலையில், அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதற்குக் காரணம், அந்த உணவகத்தில் சட்டவிரோதப் பணியாளர்கள் வேலை செய்துவந்ததுதான்.
ஆனால், தன் உணவகத்தில் சட்டவிரோதப் பணியாளர்கள் வேலை செய்துவந்தது தனக்குத் தெரியாது என உணவக மேலாளரான அப்துல் (Abdul Basit Daoud) கூறியுள்ளார்.
விடயம் என்னவென்றால், ஏற்கனவே இரண்டு முறை புலம்பெயர்தல் அதிகாரிகள் இந்த உணவகத்தை சோதனையிட்டு, அங்கு சட்டவிரோதப் பணியாளர்கள் வேலை செய்வது தெரியவந்ததால், 2020ஆம் ஆண்டு 10,500 பவுண்டுகளும், 2024ஆம் ஆண்டு 135,000 பவுண்டுகளும் அபராதம் விதித்துள்ளார்கள்.
அத்துடன், அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கு மிகக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதும், சிலருக்கு வெறும் உணவு மட்டுமே ஊதியமாக வழங்கப்படுவதும் தெரியவந்தது.
இளவரசி டயானா, உயிருடன் இருக்கும்வரை, தனது பெயர் கொண்ட அந்த உணவகத்துக்கு தனது இரண்டு மகன்களுடனும் வருவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |