வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டுவதற்காக தனது நிலத்தைக் கொடுக்கும் இளவரசர் வில்லியம்
இளவரசர் வில்லியமுக்குச் சொந்தமான நிலம் ஒன்றில், வீடற்றவர்கள் அல்லது வீடற்றவர்களாகும் அபாயத்திலிருக்கும் இளைஞர்களுக்கான வீடுகள் கட்டப்பட உள்ளன.
தனது நிலத்தைக் கொடுக்கும் இளவரசர் வில்லியம்
பிரித்தானிய இளவரசர் வில்லியமுக்குச் சொந்தமான நிலத்தில், 39 புதிய வீடுகள் கட்டப்பட உள்ளன.
அவை, 18 முதல் 25 வயதுடைய வீடற்றவர்கள் அல்லது வீடற்றவர்களாகும் அபாயத்திலிருக்கும் இளைஞர்களுக்காக ஒதுக்கப்பட உள்ளன.
இந்த திட்டத்துக்கு, அடுத்த வாரம், அதாவது, ஜூலை மாதம் 29ஆம் திகதி, உள்ளூர் கவுன்சில் ஒப்புதலளிக்க உள்ளது.
வீடில்லாமல் தெருக்களில் வாழ்வோர் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் இளவரசர் வில்லியம், வீடற்றோருக்காக The Homewards charity என்னும் தொண்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கி நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |