நெற்றியில் வைக்கப்பட்ட திலகத்தை அண்ணாமலை அழித்தாரா? காயத்ரி ரகுராம் கிளப்பும் சர்ச்சை
நெற்றியில் பழங்குடி பெண் வைத்த திலகத்தை அண்ணாமலை அழித்ததாக காயத்ரி ரகுராம் வீடியோ மூலம் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவை தேர்தல் தமிழகத்தில் முடிந்த நிலையிலும் கூட பரபரப்பு குறைந்த பாடில்லை. ஒரு புறம் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது என்றும், மறுபுறம் அரசியல் காட்சிகள் மற்ற கட்சியினரை குற்றம் சாட்டியும் வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேரளா மற்றும் கர்நாடகா அரசியல் பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை முன்னதாக கிராமங்களுக்கு நேரடியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதி மக்களிடம் அண்ணாமலை கோரிக்கைகளை கேட்டுக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் அண்ணாமலையை வரவேற்று ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகம் இட்டார். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு
நடிகையும், அதிமுக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் அண்ணாமலை நெற்றியில் பழங்குடி பெண் வைத்த திலகத்தை அவர் அழித்ததாக கூறியுள்ளார்.
கோவை பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை அப்போது அப்பகுதியைச் சேர்ந்த மலை கிராம பழங்குடியின பெண்கள் அண்ணாமலைக்கு ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வைத்தனர். பழங்குடியின பெண்கள் நெற்றியில் திலகமிட்ட அடுத்த சில நிமிடங்களில் அதனை அண்ணாமலை அழிக்கவே அங்கிருந்த பெண்கள் கடும்… pic.twitter.com/wqBOl9yxQv
— Gayathri Raguramm - Say No To Drugs & DMK (@Gayatri_Raguram) April 22, 2024
இது தொடர்பான வீடியோவை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அவர், "கோவை பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலைக்கு அப்போது அப்பகுதியைச் சேர்ந்த மலை கிராம பழங்குடியின பெண்கள் ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வைத்தனர்.
பழங்குடியின பெண்கள் நெற்றியில் திலகமிட்ட அடுத்த சில நிமிடங்களில் அதனை அண்ணாமலை அழிக்கவே அங்கிருந்த பெண்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |