விஜய் கட்சியில் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்து விட்டாரா? புகைப்படத்தால் கிளம்பிய செய்தி
தமிழக வெற்றி கழக கட்சியில் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்து விட்டார் என்ற தகவல் பரவி வருகிறது.
உண்மை என்ன?
நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழாவில், சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார்.
அப்போது, பெரியார், அம்பேத்கர், காமராஜர், அஞ்சலையம்மாள், வேலு நாச்சியார் ஆகியோர் சிலைகளை திறந்து வைத்து மாலை அணிவித்தார்.
இந்நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தவெகவின் 2ம் ஆண்டு தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
அந்தவகையில், மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தய போட்டியை மதுரை வடக்கு மாவட்டச் செயலாளராக உள்ள விஜய் அன்பன் என்பவர் தொடங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றி மாறன் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கினார்.
அப்போது, தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இயக்குநர் வெற்றி மாறனுக்கு மாலை அணிவித்து சிறப்பித்தனர். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானதால் அவர் தவெகவில் இணைந்து விட்டார் என்று தகவல் பரவி வந்தது.
ஆனால், அந்த தகவலில் உண்மை இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. மாட்டுவண்டிப் பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக மட்டுமே அவர் கலந்து கொண்டுள்ளார்.
தனது பட வேலைகளுக்காக மதுரை சென்றிருந்த நிலையில் இந்த நிகழ்வில் வெற்றி மாறன் கலந்து கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |