தன் நாட்டு மக்களை சோம்பேறிகள் என்று கூறினாரா ஜேர்மன் சேன்ஸலர்?

Germany Friedrich Merz
By Balamanuvelan May 18, 2026 08:10 AM GMT
Report

ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ், ஜேர்மன் மக்களை சோம்பேறிகள் என்று அழைக்கும் எண்ணம் தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று கூறியுள்ளார்.

ஜேர்மன் மக்களை சோம்பேறிகள் என கூறினாரா ஜேர்மன் சேன்ஸலர்

தான் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, ஜேர்மனியின் வளர்ச்சியை அதிகரிப்பதற்காகவும், தீவிர வலதுசாரிக்கட்சியான AfD கட்சியின் எழுச்சியைத் தடுபதற்காகவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையிலும், மக்கள் மனதில் இடம்பிடிக்க மெர்ஸ் தவறியுள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

தன் நாட்டு மக்களை சோம்பேறிகள் என்று கூறினாரா ஜேர்மன் சேன்ஸலர்? | Did Merz Says Germany Peoples Are Lazy

சமீபத்தில் Deutschland TREND என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், வாக்காளர்களில் 16 சதவிகிதம் பேர் மட்டுமே மெர்ஸ் ஆட்சி குறித்து திருப்தி தெரிவித்துள்ளனர். இதுவரை ஆண்ட சேன்ஸலர்களிலேயே இவ்வளவு குறைந்த ஆதரவைப் பெற்றுள்ளவர் மெர்ஸ்தான்.

இந்நிலையில், நாம் அரசை வழிநடத்த முயற்சிக்கும் பாதை சரியானது என்பதை, நாட்டு மக்களை போதுமான அளவு நம்பவைப்பதில் நான் ஏன் தோல்வியடைகிறேன் என்ற கேள்வி என்னை மேலும் மேலும் கவலைக்குள்ளாக்கி வருகிறது என்று கூறியுள்ளார் மெர்ஸ்.

இந்தச் செய்தி நன்கு புரிந்துகொள்ளப்படும் வகையில், எனது தகவல் தொடர்பை நான் மேம்படுத்த வேண்டும் என்பதை அறிவேன் என்றும் கூறியுள்ளார் மெர்ஸ். 

ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட 2ம் உலகப் போர் வெடிகுண்டு: 30,000 மக்கள் வெளியேற்றம்

ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட 2ம் உலகப் போர் வெடிகுண்டு: 30,000 மக்கள் வெளியேற்றம்

விடயம் என்னவென்றால், வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை செய்வது அல்லது மிக நீண்ட மருத்துவ விடுப்பு எடுப்பது போன்ற பழக்கங்கள் நாட்டின் போட்டித்திறனைப் பாதிக்கின்றன என்று சமீபத்தில் மெர்ஸ் கூறியிருந்தார்.

அந்த விடயம் ஜேர்மன் மக்களை எரிச்சலடையச் செய்துள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழலில், ’என் கட்சியில் உள்ள யாரும், நான் உட்பட, ஜேர்மனியில் வாழும் மக்கள் சோம்பேறிகள் என்று ஒருபோதும் சொன்னதில்லை, இல்லவே இல்லை’ என்று கூறியுள்ளார் மெர்ஸ்.

ஜேர்மனியை விட சுவிட்சர்லாந்து போன்ற ஒரு நாட்டில் ஆண்டுக்கு 200 மணிநேர வேலை அதிகம் என்பதையும், அதனால் சுவிட்சர்லாந்து நம்மை விட வெளிப்படையாகவே சிறந்த நிலையில் உள்ளது என்பதையும்தான் தான் சுட்டிக்காட்டியதாகவும் தெரிவித்துள்ளார் மெர்ஸ்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US