துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன்பு ஜிப்லைன் ஆப்ரேட்டர் சமிக்ஞை கொடுத்தாரா? சுற்றுலா பயணி கொடுத்த தகவல்
பஹல்காம் தாக்குதலில் சுற்றுலா பயணி அளித்த தகவலின் அடிப்படையில் ஜிப்லைன் ஆப்ரேட்டரிடம் என்ஐஏ விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
என்ஐஏ விசாரணை
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம் நிலவியுள்ளது.
இந்நிலையில், இந்திய பாதுகாப்புப் படையினர் இதுவரை நான்கு முறை தீவிரவாதிகளை நெருங்கியிருப்பதாகவும், அடர்ந்த காடுகள் என்பதால் தீவிரவாதிகளைப் பிடிப்பதில் சிக்கல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கிஷ்த்வார் மலைத்தொடரில் பனிப்பொழிவு குறைவாக இருப்பதால் அங்கு தீவிரவாதிகள் நகர்ந்து வருவதாகவும் தெரிகிறது.
இதனிடையே, காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற குஜராத்தைச் சேர்ந்த ரிஷி பட் என்ற சுற்றுலா பயணி அளித்த தகவலின் அடிப்படையில் ஜிப்லைன் ஆப்ரேட்டரிடம் என்ஐஏ விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அவர் கூறுகையில், "தான் ஜிப் லைன் சாகசத்தில் ஈடுபட்ட போது அதன் ஆபரேட்டர் 3 முறை குரல் எழுப்பிய பின்னர் தான் துப்பாக்கிச் சூடு நடந்தது. அதாவது, துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன்பு சமிக்ஞை கொடுப்பது போல கத்தினார்" என்றார்.
இவர் கூறிய தகவலின் அடிப்படையில் ஆப்ரேட்டரிடம் என்ஐஏ விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |