ஏலத்திற்கு வரும் 102.1 கிலோ தங்க கழிப்பறை! விலை எவ்வளவு தெரியுமா?
அமெரிக்காவில் 100 கிலோ தங்கத்தால் ஆன கழிப்பறை உருவாக்கப்பட்டுள்ளது.
தங்க கழிப்பறையின் விலை
இந்தியாவில் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், நடுத்தர குடும்பங்களால் தங்கம் வாங்குவது என்பது பகல் கனவாக மாறி வருகிறது.

அதே நேரத்தில் அமெரிக்காவில் சுமார் 102.1 கிலோ எடையுள்ள தங்க கழிப்பறை உருவாக்கப்பட்டுள்ளது.
மொரிசியோ கட்டெலன் என்ற கைவினைக் கலைஞரால் உருவாக்கப்பட்ட இந்த தங்க கழிப்பறை வரும் 18ம் திகதி நியூயார்க் நகரில் ஏலத்துக்கு வர உள்ளது.

102.1 கிலோ எடையுள்ள தங்க கழிப்பறையின் ஆரம்ப விலையானது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 88 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், இணையத்தில் இந்த தங்க கழிப்பறையின் புகைப்படங்கள் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் பலரது ஆதங்கத்தையும் பெற்று வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |