மூன்று முறை மரணம்... வீட்டைவிட்டு துரத்தப்படும் நெருக்கடி: அமெரிக்கர் ஒருவரின் வாழ்வில் விளையாடும் மர்மம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஒருவர் பேய் தொல்லை காரணமாக இரண்டு குடியிருப்புகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேறும் நிலை ஏற்பட்டதாக தமது பகீர் அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
விபத்துக்கு பின்னர் வேட்டையாடும் பேய்
டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 36 வயது Nick Summers என்பவர் தமக்கு ஏற்பட்ட ஒரு விபத்துக்கு பின்னர் பேய் ஒன்று தம்மை துரத்துவதாக நம்புகிறார். பணியிடத்தில் நடந்த அந்த விபத்திற்கு பின்னர் அவருக்கு மூன்று முறை இதயம் நின்று போயுள்ளது.
@KNM
இதன் பின்னர் தங்கள் குடியிருப்புக்குள் அசாதாரணமான நடவடிக்கைகளை உணர்ந்ததாக Nick Summers மற்றும் அவரது மனைவி தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, வீட்டில் இருக்கும் பொருட்கள் தாமாகவே நகர்வதும், அந்தரத்தில் மிதப்பதும் கண்காணிப்பு கமெராவிலும் பதிவாகியுள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தின் Abilene பகுதியை சேர்ந்த Nick Summers பேய் தொல்லை காரணமாக இதுவரை இரண்டு குடியிருப்புகள் மாறியதாகவும், தற்போது இன்னும் சில வாரங்களில் மூன்றாவது வீட்டுக்கு குடியேற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தாங்கள் குடியிருந்த இரண்டு வீடுகளிலும் மாதம் 20 மின்சார பல்புகள் வரையில், பேய் தொல்லை காரணமாக மாற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சிலமுறை தம்மீதும் பொருட்கள் வீசப்பட்ட அனுபமும் இருப்பதாக Nick Summers தெரிவித்துள்ளார்.
2019ல் எண்ணெய் கிணறு ஒன்றில் பணியாற்றும் போது 300 பவுண்டுகள் கொண்ட இயந்திரம் ஒன்று சரிந்து விழுந்ததில் சிக்கிக்கொண்ட Nick Summers படுகாயங்களுடன் தப்பியுள்ளார்.
பேய் தொடர்பில் செய்த ஆய்வு
இதில், 27 எலும்புகள் நொறுங்கியதுடன் வலது நுரையீரல் செயலிழந்துள்ளது. தீவிர சிகிச்சையால் குணமடைந்த Nick Summers, பொழுது போக்கிற்காக பேய்கள் தொடர்பில் ஆய்வு செய்துள்ளார்.
@KNM
அதன் பின்னரே பேய்கள் தொல்லை தமக்கு ஏற்பட்டதாக கூறுகின்றார். மேலும், கைவிடப்பட்ட மருத்துவமனை ஒன்றில் பேய் தொடர்பில் ஆய்வு செய்த பின்னரே, தமக்கு இந்த அசாதாரணன அனுபவம் ஏற்படுவதாகவும் அவர் நம்புகிறார்.
அந்த மருத்துவமனை 1940களில் இருந்தே கைவிடப்பட்ட நிலையில் உள்ளது எனவும், அந்த மருத்துவமனையில் தங்கியிருந்த பேயாக இருக்கலாம் தம்மை தொடர்வதாகவும் Nick Summers நம்புகிறார்.