நமது உடல் ஆரோக்கியத்தை நாசமாக்கும் உணவுப் பொருட்கள்! விஷமாக மாறும் சுவை
நாம் உண்ணும் உணவே நமது ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. தற்போதைய காலக்கட்டத்தில் இளம்தலைமுறையினருக்கு கூட இதயநோய், புற்றுநோய் எல்லாம் ஏற்படுகிறது.
இதற்கு காரணம் நமது தவறான உணவுப்பழக்கம் தான். நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளுமே நல்லது என்று நினைக்க வேண்டாம்.
அதிலும் அன்றாடம் நாம் உணவில் சேர்க்கும் சில பொருட்கள், அந்த உணவை நஞ்சாக்கி, உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது.
வறுத்த உணவுகளில் கலோரிகள் அதிகம் இருப்பதோடு, எண்ணெயை அளவுக்கு அதிகமாக சூடேற்றுவதால், அந்த எண்ணெயில் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்கள் உருவாகி, புற்றுநோய் வரும் அபாயம் அதிகரிக்கும். ஆகவே அளவுக்கு அதிகமாக எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.
சர்க்கரையில் ஊட்டச்சத்துக்கள் மிகவும் குறைவு. சர்க்கரை கலந்த உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ளும் போது, அது சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.
சீஸ், வெண்ணெய் போன்றவற்றில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இந்த உணவுப் பொருட்களை உணவில் சேர்த்தால், அதில் உள்ள ட்ரான்ஸ் கொழுப்புக்கள் உடலில் ஆங்காங்கு தங்கி, உடல் பருமனை உண்டாக்கி வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கக்கூடிய நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.
தாகத்தைத் தணிப்பதற்காக சோடா பானங்கள் அல்லது பழச்சாறுகளை வாங்கிப் பருகுவோம். ஆனால் இதில் சர்க்கரையும், கார்பன்-டை-ஆக்ஸைடு தான் உள்ளது. மேலும் இவற்றில் எந்த ஒரு ஊட்டச்சத்துக்களும் இல்லை. இதற்கு பதிலாக பழங்களாக சாப்பிடலாம்.
பாலில் அதிகமாக நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. கல்லீரல் ஆரோக்கியத்தின் மீது நீங்கள் அக்கறை கொண்டுள்ளீர்கள் எனில் இது உங்களுக்கு உகந்த உணவு இல்லை. கல்லீரல் பாதிப்பை குறைக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் முழு பால் உண்ணலை மாற்றி அமைக்கலாம்.
இதற்காக நீங்கள் குறைந்த கொழுப்புள்ள பாலை தேர்வு செய்யலாம் அல்லது க்ரீன் டீ, இலவங்கப்பட்டை தேநீர் போன்ற பானத்திற்கு மாறலாம்.