Golden பாஸ்போர்டிற்கும் Golden விசாவிற்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா? இதுதான் விடயம்
ஒரு நாட்டில் தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் இல்லாமல் இருக்க வழங்கப்படும் Golden பாஸ்போர்ட்டுக்கும், Golden விசாவிற்கும் உள்ள வித்தியாசம் குறித்து இங்கே காண்போம்.
Golden விசாக்கள்
உலகின் பல நாடுகளில் முக்கிய நபர்களுக்கு Golden விசாக்கள் வழங்கப்படுகின்றன. இவை பயணம் மற்றும் முதலீட்டிற்கான தனித்துவமான வாய்ப்புகளையும் வழங்குகின்றன.
சில நாடுகள் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ், தற்காலிக அனுமதியை வழங்கும் Golden விசாக்கள் நிரந்தரமாகவும் மாற்றுகின்றன.
பொதுவாக இந்த விசாவைப் பெறுபவர்கள், ஒரு நாட்டில் குறிப்பிட்ட காலத்திற்கு தங்கி வேலை செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆனால், ஒரு சில நாடுகளில் இந்த விசாவை வழங்குவதற்கு குறைந்தபட்சம் தங்கியிருக்கும் காலம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட முதலீடு தேவைப்படுகிறது.
இதற்கு 18 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். அத்துடன் குற்றப்பின்னணி இல்லாமல் இருக்க வேண்டும்.
Golden பாஸ்போர்ட்
இந்த பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் பல்வேறு அம்சங்களில், குடிமக்களைப் போலவே ஏறக்குறைய சமமான முறையில் நடத்தப்படுவார்கள்.
தீர்மானிக்கப்பட்ட காலத்திற்கு நாட்டில் தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் இல்லாமல், வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமையை வழங்குவது இந்த Golden பாஸ்போர்ட். தடை செய்யப்பட்ட நாட்டில் இருந்து வராமல் இருத்தல், 18 வயதை நிறைவு செய்தல் ஆகிய நிபந்தனைகள் இதற்கும் பொருந்தும்.
Golden விசா மற்றும் Golden பாஸ்போர்ட் வித்தியாசம்
- Golden பாஸ்போர்ட்கள் ஆஸ்திரியா, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் போன்ற நாடுகள் ஒரு நிலையான தங்கும் காலத்தை கட்டாயப்படுத்தாமல் வழங்குகின்றன. ஆனால், Golden விசாக்கள் பொதுவாக தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதிக்கின்றன.
- எனினும், சில நாடுகள் தற்காலிகமாக நாட்டில் தங்கியிருப்பவர்களுக்கு நிரந்தர வசிப்பிடத்தை வழங்குகின்றன.
- சவுதி அரேபியா போன்ற நாடுகள் இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்காத நிலையில், Golden விசாக்கள் Golden பாஸ்போர்ட்டை விட கவர்ச்சிகரமான பலன்களை வழங்குகிறது. அதாவது, இதனை அங்கீகரிக்கும் நாடுகளில் உள்ள வசதிகளை பார்வையிடலாம் மற்றும் அனுபவிக்கலாம்.
- அதேபோல், Golden பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களும் நாட்டின் குடிமக்கள் அனுபவிக்கும் நன்மைகளுக்கு சமமான பலன்களை அனுபவிக்கின்றனர். ஆனால், Golden விசாவோ வேலை செய்யவும், படிக்கவும் வாய்ப்பை வழங்குகிறது.
- Golden பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அந்த நாடுகளில் வரி செலுத்தலாம். இதன்மூலம் அந்நாட்டின் குடிமக்களுக்கு கிடைக்கும் சுகாதாரப் பாதுகாப்பு நலன்கள் உட்பட, சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் அனைத்து நன்மைகளுக்கும் தகுதி பெறுவார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |