கைகளை இழந்தாலும் கால்களில் பௌலிங்.. கழுத்தில் பேட்டிங்: கிரிக்கெட் வீரரின் அசாத்திய திறமை
விபத்தில் இரண்டு கைகளை இழந்த போதிலும் கழுத்தில் பேட்டை பிடித்து பேட்டிங் செய்து வரும் மாற்றுத் திறனாளி வீரர் ஒருவர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டனாக உயர்ந்துள்ளார்.
மாற்றுத் திறனாளி கிரிக்கெட் வீரர்
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், வாகாமா கிராமம் பிஜ்பெஹாராவைச் சேர்ந்தவர் அமீர் உசேன் (34). இவர் ஒரு மாற்றுத் திறனாளி கிரிக்கெட் வீரர் ஆவார். இவரது ஆசிரியர், இவரிடம் இருக்கும் திறமையை கண்டுபிடித்து பாரா கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தினார்.
அதன்படி, 2013 -ம் ஆண்டு முதல் தொழில் முறை கிரிக்கெட்டை அமீர் உசேன் விளையாடி வருகிறார். இவர் தனது தோள்பட்டைக்கும் கழுத்துக்கும் இடையில் பேட்டைப் பிடித்து பேட்டிங் செய்தும், கால்களை வைத்து பௌலிங் செய்தும் வருகிறார். தனது திறமையினால் தற்போது பாரா கிரிக்கெட் அணியின் கேப்டனாக அமீர் உசேன் உயர்ந்துள்ளார்.
விபத்தில் கைகளை இழந்த அமீர் உசேன்
இவர் தனது 8 வயதில் தந்தையில் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு கைகளையும் இழந்துள்ளார். இருந்தாலும், தனது அசாத்திய திறமையினால் உயர்ந்து நிற்கிறார்.
மேலும், அமீர் சிறுவனாக இருக்கும் போது தனது வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்களை நோக்கி பொம்மை துப்பாக்கியை காட்டி ஓட விட்ட சுவாரஸ்ய சம்பவமும் வெளிவந்துள்ளது.
#WATCH | Anantnag, J&K: 34-year-old differently-abled cricketer from Waghama village of Bijbehara. Amir Hussain Lone currently captains Jammu & Kashmir's Para cricket team. Amir has been playing cricket professionally since 2013 after a teacher discovered his cricketing talent… pic.twitter.com/hFfbOe1S5k
— ANI (@ANI) January 12, 2024
தற்போது, இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி அணிந்து கிரிக்கெட் விளையாடும் அமீர் உசேனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |