அதிகரிக்கும் டிஜிட்டல் Nomad விசா எண்ணிக்கை... ஆப்பிரிக்கா உட்பட போட்டி போடும் நாடுகள்
குடியிருப்பில் இருந்தே பணியாற்றுவது என்பது கோவிட் பெருந்தொற்று காலத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்திருந்தாலும், தற்போது அந்த திட்டம் உலகமெங்கும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
சில கரீபியன் நாடுகள்
அந்த வகையில் தற்போது டிஜிட்டல் Nomad விசா வைத்திருப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஒரே அறைக்குள் இருந்து பணியாற்றும் மன நிலையில் இல்லாத தொழில் வல்லுநர்கள் தங்களை இருகரமும் நீட்டி ஆதரிக்கும் நாடுகளைத் தேடுகின்றனர்.
இதனாலையே, 2025ல் டிஜிட்டல் Nomad விசா வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில கரீபியன் நாடுகள் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக டிஜிட்டல் Nomad விசா வழங்கும் திட்டத்தை ஊக்குவித்து வருகிறது.
இதற்கென அவர்கள் handyvisas.com என இணைய பக்கம் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளனர். பொதுவாக சுற்றுலா விசாவில் எந்த நாடும் எவரையும் வேலை செய்ய அனுமதிக்காது. வேலைக்கான அனுமதி என்பது உள்ளூர் மக்களுக்கானது. அல்லது உரிய வேலை விசா பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், டிஜிட்டல் Nomad விசா அப்படியல்ல. உள்ளூர் மக்களின் வேலையைப் பறிக்காமல், திறமையான நிபுணர்கள் நீண்ட காலம் தங்கி உள்ளூர் பொருளாதாரத்திற்கும் பங்களிக்க அனுமதிக்கிறது.
Nomad விசா வாய்ப்பளிக்கும் நாடுகள் எண்ணிக்கையை மட்டும் குறிவைப்பதில்லை, மாறாக உள்ளூரில் செலவு செய்யும், சர்வதேச தொடர்புகளுடைய மென்பொருள் பொறியாளர்கள் முதல் ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர்கள் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்துபவர்கள் வரை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
பல சலுகைகளுடன்
இவர்களே அதிகமாக வெளிநாட்டு வருவாயை ஈட்டுவதுடன், மிகவும் குறைந்த விலையில், சொகுசான வாழ்க்கை வாழ விரும்புபவர்கள். இவர்களையே உள்ளூர் மக்களின் வேலையைப் பறிக்காமல் பொருளாதாரத்தை உயர்த்த விரும்பும் நாடுகள் ஈர்த்து வருகிறது.
2025ல், ஐரோப்பா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் உள்ள நாடுகள் டிஜிட்டல் Nomad விசா திட்டங்களைத் தொடங்கியுள்ளன அல்லது மேம்படுத்தியுள்ளன. போர்த்துகல் ஏற்கனவே இப்படியான திட்டத்தில் முதலிடத்தில் உள்ளது.
சமீபத்தில் பல சலுகைகளுடன் தாய்லாந்தும் டிஜிட்டல் Nomad விசா திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. பெரும்பாலான நாடுகள் இனி சுற்றுலாப் பயணிகளுக்காகவோ அல்லது முதலீட்டாளர்களுக்காகவோ மட்டும் போட்டியிடப்போவதில்லை.
அவை புதிய வகையான இந்த டிஜிட்டல் குடியிருப்பாளர்களுக்காகப் போட்டியிடுகின்றன, ஆனால் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பங்களிக்கக் கூடியவர்களைத் தெரிவு செய்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |