உயிரிழந்த இந்திய விளையாட்டு ஜாம்பவான்! இரங்கல் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் அணி கேப்டன்
கொரோனா தொற்றால் மரணமடைந்த முன்னாள் இந்திய தடகள வீரர் மில்கா சிங்க்கு திமுத் கருணரத்னே இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் தடகள வீரா் மில்கா சிங் வெள்ளிக்கிழமை இரவு காலமானாா்.
இதையடுத்து, அவரின் உடல் சண்டீகரில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரின் உடலுக்கு பிரதமா் மோடி, ராணுவம் சாா்பில் மலா்வளையம் வைக்கப்பட்டது.
பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினாா். மில்கா சிங்கின் இறுதி ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது அவரின் உடல் கொண்டு செல்லப்பட்ட வாகனத்துக்குப் பின்னால் பொதுமக்கள் திரண்டு மயானம் வரை சென்றனா்.
அங்கு காவல் துறையினரின் துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின்னா் அவரின் சிதைக்கு மில்கா சிங்கின் மகனும் கோல்ஃப் விளையாட்டு வீரருமான ஜீவ் மில்கா சிங் தீ மூட்டினாா்.
இந்த நிலையில் மில்கா சிங் மறைவுக்கு இலங்கை கிரிக்கெட் அணி தலைவர் திமுத் கருணரத்னே இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரின் டுவிட்டர் பதிவில் பறக்கும் சீக்கியர் # மில்கா சிங் காலமாகிவிட்டார்
அவரது ஆன்மா அமைதியாக இளைப்பாறட்டும் என பதிவிட்டுள்ளார்.