இலங்கை டெஸ்ட் அணி கேப்டன் புதிய சாதனை!
இலங்கையின் அணியின் டெஸ்ட் கேப்டனான திமுத் கருணரத்னே அதிக டெஸ்ட் சதங்கள் விளாசிய தொடக்க வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
தொடக்க வீரராக அதிக சதங்கள்
அயர்லாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. கேப்டன் திமுத் கருணரத்னே 115 ஓட்டங்கள் விளாசினார்.
இது அவருக்கு 16வது டெஸ்ட் சதம் ஆகும். இதன்மூலம் இலங்கை அணியில் அதிக டெஸ்ட் சதங்கள் விளாசிய தொடக்க வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
Image: AP Photo
சாதனைப் பட்டியல்
முன்னாள் கேப்டன் மார்வன் அதப்பத்து இந்த சாதனையை படைத்திருந்த நிலையில், திமுத் கருணரத்னே அவருடன் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.
The Sri Lanka captain continues to reach new heights in Test cricket ?
— ICC (@ICC) April 27, 2023
More ➡️ https://t.co/vwu1sbnaKN #SLvIRE pic.twitter.com/qRQ6hoNkQP
இருவரும் 16 சதங்கள் அடித்துள்ளனர். இந்தப் பட்டியலில் சனத் ஜெயசூரியா 13 சதங்களுடன் மூன்றாவது இடத்திலும், திலகரத்னே தில்ஷன் 8 சதங்களுடன் 4வது இடத்திலும் உள்ளனர்.
Image: AFP