கல்யாண வீட்டு ஸ்பெஷல் திண்டுக்கல் மட்டன் பிரியாணி: ரெசிபி இதோ

Healthy Food Recipes
By Yashini Jan 07, 2024 09:30 AM GMT
Report

திண்டுக்கல் மட்டன் பிரியாணி என்றாலே அதன் தனித்துவமான சுவை சாப்பிட்டால் அப்படியே நாக்கிலே தங்கிவிடும்.

இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு சுவையான மட்டன் பிரியாணி.

பாரம்பரியமான முறையில் அதே சுவையில் வீட்டிலேயே ஈசியா திண்டுக்கல் மட்டன் பிரியாணி செய்யலாம். எப்படி செய்வது?  

கல்யாண வீட்டு ஸ்பெஷல் திண்டுக்கல் மட்டன் பிரியாணி: ரெசிபி இதோ | Dindigul Mutton Biryani Recipe In Tamil

தேவையான பொருட்கள்

  • சீரக சம்பா அரிசி- 1kg
  • மட்டன்- 1¼ kg
  • பெரிய வெங்காயம்- 2
  • சின்ன வெங்காயம்- 200g
  • தக்காளி- 1
  • பூண்டு- 150g
  • இஞ்சி- 150g
  • மிளகாய் தூள்- 10g
  • பச்சை மிளகாய்- 4
  • புதினா- 1 கைப்பிடி
  • கொத்தமல்லி இலை- 1 கைப்பிடி
  • பட்டை- 10g
  • ஏலக்காய்- 5g
  • கிராம்பு- 3g
  • அன்னாசி பூ- 2
  • எலுமிச்சை- ½
  • தயிர்- 100ml
  • நெய்- 200ml
  • எண்ணெய்- 100ml 

30 நிமிடங்கள் போதும்.., அட்டகாசமான சுவையில் சோம்பேறி சிக்கன்: எப்படி செய்வது?

30 நிமிடங்கள் போதும்.., அட்டகாசமான சுவையில் சோம்பேறி சிக்கன்: எப்படி செய்வது?

செய்முறை

முதலில் ஒரு அடிகனமான பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும்.

சூடானதும் இதில் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும், பின் பச்சைமிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின் அதில் புதினா இலை சேர்த்து வதங்கியதும் கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து இதில் சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் ஒன்றிண்டாக சேர்த்து அரைத்து சேர்த்து வதக்கவும்.

அடுத்து இதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் இதில் தக்காளி மற்றும் தயிர் சேர்த்து வதக்கவும்.

இதனைதொடர்ந்து, ஒரு மிக்ஸி ஜாரில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ சேர்த்து தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

கல்யாண வீட்டு ஸ்பெஷல் திண்டுக்கல் மட்டன் பிரியாணி: ரெசிபி இதோ | Dindigul Mutton Biryani Recipe In Tamil

பின் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறவும். அடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி பின் மட்டனை சேர்த்து நன்கு கிளறவும்.

மட்டன் நன்கு வதங்கி வந்ததும் மட்டன் மூழ்கின்ற அளவிற்கு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 20 நிமிடம் நன்கு வேக வைக்கவும்.

சீரக சம்பா அரிசியை கழுவி 20 நிமிடம் நன்கு ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு கப் அரிசிக்கு 1½ கப் தண்ணீர் அளந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அடுத்து மட்டன் நன்கு வெந்து வந்ததும் அதில் எடுத்துவைத்துள்ள அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கொதித்து வந்ததும் அதில் எலுமிச்சை சாறு மற்றும் அரிசி சேர்த்து அதிகமான தீயில் வைத்து வேகவைக்கவும்.

அரிசி 90% நன்கு வெந்து வந்ததும் மிதமான தீயில் வைத்து 20 நிமிடம் தம் போட்டு கிளறினால் சுவையான கல்யாண வீட்டு ஸ்பெஷல் திண்டுக்கல் மட்டன் பிரியாணி தயார்.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US