30 நிமிடங்கள் போதும்.., அட்டகாசமான சுவையில் சோம்பேறி சிக்கன்: எப்படி செய்வது?
அசைவ உணவுகளிலே சீக்கரமாக செய்யக்கூடியது சிக்கன் ரெசிபிகள் தான்.
சிக்கனை வைத்து இதுவரைக்கும் பிரியாணி, குழம்பு என பலவகையான ரெசிபிகளை செய்து சாப்பிட்டிருப்போம்.
இப்போது, வித்தியாசமான முறையில் அட்டகாசமான சுவையில் சோம்பேறி சிக்கன் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சிக்கன்- 1kg
- பூண்டு பேஸ்ட்- 50g
- இஞ்சி பேஸ்ட்- 40g
- சின்ன வெங்காயம்- 75g
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- மிளகு தூள்- 1 ஸ்பூன்
- சீரக தூள்- ½ ஸ்பூன்
- சோம்பு தூள்- ½ ஸ்பூன்
- தக்காளி- 50g
- கருவேப்பிலை- 1 கொத்து
- கொத்தமல்லி- சிறிதளவு
- எலுமிச்சை பழம்- 1
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து அதில் இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் நன்கு அரைத்து போட்டுக்கொள்ளவும்.
அடுத்து மிளகாய் தூள், மிளகு தூள், சீரக தூள், சோம்பு தூள், தக்காளி, கருவேப்பிலை, மல்லி இலை எலுமிச்சை சாறு, உப்பு சேர்க்கவும்.
இதன் பின் அடுப்பை பற்ற வைத்து அனைத்து மசாலாவும் நன்கு வேகும் வரை கைவிடாமல் கிளறவும்.
மசாலா கெட்டியாகி வரும்பொழுது அடிபிடிக்காமல் இருக்க ½ டம்ளர் தண்ணீர் சேர்த்து கிளறவும். இதில் எண்ணெய் பிரிந்து வந்ததும் இதில் சிக்கன் சேர்த்து நன்கு வதக்கவும்.
15 நிமிடம் சிக்கனை நன்கு வேகவைக்கவும். இதன் பின் இறுதியாக சிறிதளவு மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்து கிளறினால் சுவையான சோம்பிரி சிக்கன் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |