சூப்பரான சுவையில் கேரளா ஸ்டைல் மீன் குழம்பு: ரெசிபி இதோ
பொதுவாகவே சைவ உணவுகளை விட அசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் தான் அதிகம். அதிலும் கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்காது.
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அள்ளி தரும். உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், டயட்டில் இருப்போருக்கு உகந்த ஒன்றாகவும் காணப்படுகின்றது.
அந்தவகையில், அட்டகாசமான சுவையில் கேரளா ஸ்டைல் மீன் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மீன்- 1kg
- காய்ந்த மிளகாய்- 4
- இஞ்சி- 1 துண்டு
- பூண்டு- 6
- மிளகு- 1 ஸ்பூன்
- சோம்பு- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- மல்லித்தூள்- 2 ஸ்பூன்
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- வெந்தயம்- ½ ஸ்பூன்
- கடுகு- ½ ஸ்பூன்
- கருவேப்பிலை- 1 கொத்து
- சின்ன வெங்காயம்- 15
- பச்சைமிளகாய்- 3
- உப்பு- தேவையான அளவு
- தக்காளி- 2
- புளி- நெல்லிக்காய் அளவு
- தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும்.
நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் பச்சைமிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம், மிளகு, சோம்பு, மல்லித்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் இந்த அரைத்த மசாலாவை சேர்த்து கிளறவும். பின் புளி கரைசலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.
இந்த மசாலா 15 நிமிடம் நன்கு கொதித்து வந்ததும் அதில் கழுவி சுத்தம் செய்த்து வைத்துள்ள மீன் சேர்த்து மூடி போட்டு மீனை வேகவைக்கவும்.
இறுதியாக மீன் நன்கு வெந்து வந்ததும் இதில் தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கேரளா ஸ்டைல் மீன் குழம்பு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |