கல்யாண வீட்டு ஸ்பெஷல் திண்டுக்கல் குஸ்கா: எப்படி செய்வது?
திண்டுக்கல் ஸ்டைல் குஸ்கா என்றாலே அதன் தனித்துவமான சுவை சாப்பிட்டால் அப்படியே நாக்கிலே தங்கிவிடும்.
இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு சுவையான குஸ்கா.
பாரம்பரியமான முறையில் அதே சுவையில் வீட்டிலேயே ஈசியா திண்டுக்கல் குஸ்கா செய்யலாம். எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
- பொன்னி அரிசி- 2kg
- கடலை எண்ணெய்- 200g
- நெய்- 200g
- பட்டை- 20g
- ஏலக்காய்- 10g
- கிராம்பு- 5g
- தக்காளி- 200g
- புதினா- 1 கைப்பிடி
- பெரிய வெங்காயம்- 100g
- பச்சைமிளகாய்- 6
- கொத்தமல்லி இலை- 1 கைப்பிடி
- முந்திரி- 25g
- பூண்டு- 150g
- இஞ்சி- 100g
- சின்ன வெங்காயம்- 250g
- தயிர்- 50ml
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- எலுமிச்சை பழம்- 1
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு அடிகனமான பாத்திரத்தில் நெய், கடலை எண்ணெய், புதினா, நறுக்கிய பெரிய வெங்காயம், மிளகாய் தூள் சேர்த்து பின் அடுப்பை பத்தவைத்த வதக்கவும்.
நன்கு வதங்கி வந்ததும் அதில் 1 டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து பின் அதில் (பட்டை, ஏலக்காய், கிராம்பு) பொடி, அரைத்த சின்ன வெங்காயம், அரைத்த இஞ்சி, பூண்டு பேஸ்ட், பச்சைமிளகாய், தயிர், முந்திரி, கொத்தமல்லி சேர்த்து10 நிமிடம் நன்கு வதக்கவும்.
பின் இதில் 1 கப் அரிசிக்கு 2¼ கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும்.
அடுத்த இந்த தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும் இதில் கழுவி 30 நிமிடம் ஊறவைத்த அரிசியை சேர்த்து மிதமான தீயில் வைத்து வேகவைக்கவும்.
பின் அரிசி 90% வெந்ததும் இதில் மூடி போட்டு அரை மணி நேரம் தம் போட்டு இறக்கினால் சுவையான கல்யாண வீட்டு ஸ்பெஷல் திண்டுக்கல் ஸ்டைல் குஸ்கா ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |