ஷிகர் தவானை ஸ்டம்பிங் செய்து மைதானத்தில் முட்டி போட வைத்த தினேஷ் கார்த்திக்! கமெராவில் சிக்கிய காட்சி
டெல்லி அணிக்கெதிரான போட்டியில், தவானை கொல்கத்தா வீரர் தினேஷ் கார்த்திக் முட்டி போட வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் டெல்லி அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, அந்தணியின் துவக்க வீரர்களான ஷிகார் தவான் மற்றும் ப்ரித்வி ஷா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் ஒரு கட்டத்தில், டெல்லி அணியில் விக்கெட்டே விழாது என்ற அளவிற்கு பேசப்பட்டது. முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 132 ஓட்டங்களை குவித்தது.
Never a dull moment when @SDhawan25 is on the field. ? @DineshKarthik ????https://t.co/GDR4bTRtlQ #DCvKKR #VIVOIPL pic.twitter.com/lwohB8NNou
— IndianPremierLeague (@IPL) April 29, 2021
இந்நிலையில், இந்த ஜோடி சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த போது, சுனில் நரைன் வீசிய பந்தை ஷிகார் தவான் அடித்து ஆட முற்பட்டார். ஆனால் பந்தானது விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கையில் சிக்க உடனே அவர் ஸ்டம்பிங் செய்து, நடுவரிடம் கேட்காமல் ஷிகார் தவானிடம் விளையாட்டாக அவுட் என்று கேட்டார்.
உடனே ஷிகார் தவானும், பேட்டை கீழே போட்டு விட்டு கார்த்திக்கு எதிராக முட்டி போட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.