முன்பு இந்தியா வருவதற்கு அணிகள் பயந்தன: இன்று நாம் படுமோசம்..விளாசிய தினேஷ் கார்த்திக்
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான படுதோல்வியை தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வரலாற்று தோல்வி
கவுகாத்தியில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் படுதோல்வியடைந்தது.
🚨 Dinesh Karthik Angry on Indian Team and Gautam Gambhir 😨
— Richard Kettleborough (@RichKettle07) November 26, 2025
"Every team used to be scared to come to India, but 2 white wash in span of 12 months, that's humiliating".
- What's your take 🤔 pic.twitter.com/zZUe4HZYo6
அத்துடன் டெஸ்டில் அந்த அணிக்கு எதிராக 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒயிட்வாஷ் ஆனது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் அணி மீதும், பயிற்சியாளர் கௌதம் காம்பீர் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
தினேஷ் கார்த்திக் விளாசல்
இந்த நிலையில், முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் (Dinesh Karthik) வரலாற்று தோல்விக்கு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், "டெஸ்ட் கிரிக்கெட் விளையாட இந்தியா வருவதற்கு அணிகள் முன்பு பயந்தன. இப்போது அவர்களின் நகையாடுகிறார்கள்.
12 மாத காலப்பகுதியில் இரண்டாவது ஒயிட்வாஷ். இந்தியாவில் இங்கு விளையாடிய கடைசி மூன்று தொடர்களில், இரண்டு ஒயிட்வாஷ் ஆகியிருக்கிறோம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு இது கடினமான காலம். எனவே, கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கலாம்" என தெரிவித்துள்ளார். 
[KF164 ]
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |