முதல் பந்திலேயே கோல்டன் டக்கான தினேஷ் கார்த்திக்! மட்டமான சாதனை படைத்த இந்திய அணி
தினேஷ் கார்த்திக், ஹர்சல் படேல், அக்சர் படேல் ஆகியோர் சேர்ந்து இந்திய அணிக்கு தேவையில்லாத ஒரு மோசமான சாதனையை பெற்று தந்துள்ளனர்.
இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இந்திய அணி நூலிழையில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் தினேஷ் கார்த்திக், ஹர்சல் படேல், அக்சர் படேல் ஆகிய மூவரும் தாங்கள் சந்தித்த முதல் பந்திலேயே அவுட்டாகி கோல்டன் டக் ஆனார்கள்.
அவர்கள் மூவரும் வெவ்வேறு பந்து வீச்சாளர்களால் வெவ்வேறு விதங்களில் ஆட்டமிழந்தாலும், மூவரின் கோல்டன் டக் விக்கெட்டுகள் இந்தியாவுக்கு தேவையற்ற சாதனையைப் பெற்றுத் தந்துள்ளது.
அதன்படி டி20 போட்டியில் முதல் பந்திலேயே 3 இந்திய வீரர்கள் ஆட்டமிழந்தது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
மேலும் டி20 போட்டி வரலாற்றில் எந்த அணியும் 200 ரன்களுக்கு மேல் அடித்த சூழலில் அந்த அணியின் 3 வீரர்கள் கோல்டன் டக் ஆனதில்லை. இந்த மோசமான சாதனையையும் இந்தியா படைத்துள்ளது.
தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் இந்த தொடரில் பெரியளவில் சோபிக்காதது போனது ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.