தோனியின் இடத்தில் தமிழன் தினேஷ் கார்த்திக்! கசிந்த தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்
இந்திய கிரிக்கெட் அணியில் தோனி இடத்தில் தினேஷ் கார்த்திக்கை களமிறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ரவி சாஸ்திரி அதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 15ஆவது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த தொடரில் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகச்சிறப்பாக விளையாடினார். அதன்படி பெஸ்ட் பினிஷராக இத்தொடரில் திகழ்ந்தார்.
இதனால், தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். தினேஷ் கார்த்திக் குறித்து இந்திய அணி முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் நான் உடன்படுகிறேன்.
தோனி இல்லாததால் பினிஷர் பற்றாக்குறை அணியில் இருக்கிறது. இது தினேஷ் கார்த்திக்கிற்கு அருமையான வாய்ப்பு. எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக், தோனியின் பினிஷர் இடத்தில் களமிறக்கப்படலாம் என கூறியுள்ளார்.
ரவி சாஸ்திரி பேசியுள்ள இந்த பேச்சு தினேஷ் கார்த்திக் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.