உலகக்கோப்பை தொடருக்கு இவர் தான் சிறந்த வீரராக இருப்பார்: தினேஷ் கார்த்திக்
2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு நடுவரிசையில் கே.எல்.ராகுல் தான் சிறந்த வீரராக இருப்பார் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
வீரர்களுக்கிடையே போட்டி
ஒருநாள் உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரை ஆடும் லெவனை தேர்வு செய்வதில் குழப்பம் நிலவுகிறது.
குறிப்பாக, Middle order-யில் விளையாட பல வீரர்கள் இடையே போட்டி நிலவுகிறது. ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் 4வது மற்றும் 5வது வரிசையில் களம் இறங்க போட்டியிடுகின்றனர்.
ஐந்தாம் வரிசை
இந்த நிலையில் ஐந்தாவது வரிசையில் களமிறங்க கே.எல்.ராகுல் தான் சரியாக இருப்பார் என தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'கே.எல்.ராகுல் நடுவரிசையில் மிகச் சிறந்த தேர்வாக இருப்பார். ஐந்தாவது வரிசையில் ஆட இந்திய அணி இன்னும் வீரரை தேர்வு செய்ய வேண்டி உள்ளது.
அந்த இடத்துக்கு ரிஷப் பண்ட் மற்றும் கே.எல்.ராகுலுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும் என நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை ராகுல் அந்த இடத்தில் ஆடுவார் என நினைக்கிறேன். 50 ஓவர் உலகக்கோப்பைக்கு ராகுல் மிகச் சிறந்த Middle order வீரராக இருப்பார்' என தெரிவித்துள்ளார்.
@BCCI