காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற மனைவி தீபிகாவுக்கு தினேஷ் கார்த்திக் தந்த முதல் ரியாக்ஷன்! புகைப்படம்
* காமன்வெல்த்தில் வெண்கல பதக்கம் வென்ற மனைவி தீபிகா பல்லிக்கலை வெல்டன் என வாழ்த்திய தினேஷ் கார்த்திக்
* தீபிகாவின் கடின உழைப்பை பாராட்டி இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள பதிவு
காமன்வெல்த் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தீபிகா பல்லிக்கலுக்கு வாழ்த்து தெரிவித்து அவர் கணவர் தினேஷ் கார்த்திக் போட்ட பதிவு வைரலாகியுள்ளது.
2022 காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி இணை சவுரவ் கோசல் - தீபிகா பல்லிகல் வெண்கல பதக்கம் வென்றது.
இது குறித்து தீபிகாவின் கணவர் தினேஷ் கார்த்திக் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
circleofcricket
அதன்படி சவுரவ் கோசல் - தீபிகா பல்லிகல் புகைப்படத்தை பதிவிட்டு தீபிகாவின் கடின உழைப்பை பாராட்டியுள்ளார்.
தீபிகா ஐடியை டேக் செய்த தினேஷ் கார்த்திக், “வெல்டன்! மிகவும் பெருமையாக உள்ளது” என எழுதி காதல் சின்னமான சிவப்பு நிற ஹார்டின் இமோஜியை பதிவிட்டுள்ளார்.
DK instagram