111 ஆண்டுகளுக்கு பிறகு ஏலம் விடப்படும் Titanic கப்பலின் Dinner Menu .., இந்திய மதிப்பில் இத்தனை லட்சங்கள்
டைட்டானிக் கப்பல் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட இரவு டின்னர் மெனுவானது ரூ.61 லட்சத்திற்கு ஏலம் விடப்படவிருக்கிறது.
Titanic கப்பல்
உலகளவில் இன்றும் பிரபலமாக இருக்கும் டைட்டானிக் கப்பல் ஏப்ரல் 15 -ம் திகதி 1912 -ம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் உள்ள பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 1500 பேர் வரை இறந்ததாக கூறப்படுகிறது.
Credit IMDb
111 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த கப்பலை பற்றிய மர்மமும், ஆராய்ச்சியும் தொடர்ந்து ஆராய்ச்சியாளர்களாலும், கோடீஸ்வரர்களாலும் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்த கப்பலை பற்றி தெரிந்து கொளவதற்கான ஆர்வமும் மக்களிடத்தில் உள்ளது.
Dinner Menu
இந்நிலையில், கடந்த 2017 -ம் ஆண்டு டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த கனடாவின் நோவா ஸ்கோடியாவைச் சேர்ந்த லென் ஸ்டீபன்சன் (Len Stephenson) என்ற நபர் உயிரிழந்தார்.
இவரது உடமைகளை சோதனை செய்த போது தான் டைட்டானிக் கப்பலின் முதல் வகுப்பு பயணிகளின் Dinner Menu கிடைத்தது.
இந்த மெனுவில், அப்போதைய கோடீஸ்வரர்களான ஜே.ஜே.ஆஸ்டர், பெஞ்சமின் குகன்ஹெய்ம், சர் காஸ்மோ டஃப்-கார்டன், மோலி பிரௌன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஆடம்பர உணவுகள் லிஸ்ட் இடம்பெற்றுள்ளது.
ஏலம்
இது குறித்து ஏல நிறுவனத்தின் ஆண்ட்ரூ ஆல்ட்ரிட்ஜ் என்பவர் கூறுகையில், "இந்த மெனுவானது டைட்டானிக்கில் பயணித்த முதல் வகுப்பு பயணிகளுக்கான முன்பு பதிவுசெய்யப்படாத மெனுவாகும்.
இது, அவரது குடும்பத்தினருக்கு கூட தெரியாது. அவரின் உடமைகளை சரிபார்த்தபோது தான் பழைய புகைப்பட ஆல்பத்தில் இந்த உணவு மெனு வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில், ஆய்ஸ்டர்ஸ், மாட்டிறைச்சி உள்ளிட்ட பல உயர்தர உணவு வகைகள் இடம்பெற்ற டைட்டானிக்கின் முதல் வகுப்பு இரவு உணவு மெனு 60,000 பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் ரூ. 61,18,260) ஏலம் விடப்படவிருக்கிறது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |