ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா ஒப்பந்தம் ஏமாற்றமளிக்கிறது... அமெரிக்கா கூறும் விளக்கம்
இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஐரோப்பா எடுத்த முடிவு தனக்கு ஏமாற்றத்தை அளித்ததாக அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
அவர்கள் விரும்பவில்லை
இது ஐரோப்பா உக்ரேனிய மக்களின் நலன்களை விட வர்த்தகத்திற்கே முன்னுரிமை அளிக்கிறது என்பதைக் காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், CNBC செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்த நேர்காணலில், தடைசெய்யப்பட்ட ரஷ்ய எண்ணெய் விநியோகங்களைக் கொண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை ஐரோப்பா வாங்கி வந்தது.
மேலும் அவர்கள் தனியாக ஒரு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்ததால், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த உயர் வரிகளை ஏற்க அவர்கள் விரும்பவில்லை என்றார்.
வளர்ந்து வரும் உலகளாவிய வர்த்தகப் பதட்டங்களுக்கு மத்தியில், இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதையும், அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலையை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட, நீண்ட காலமாகத் தாமதமாகி வந்த வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் செவ்வாய்க்கிழமை இந்தியாவுடன் இறுதி செய்தது.
ஒப்பந்தம் தெளிவுபடுத்துகிறது
இந்த ஒப்பந்தத்தின் மூலம், வர்த்தகம் செய்யப்படும் பொருட்களின் மதிப்பில் 96.6% பொருட்களுக்கான வரிகளை நீக்குவதன் அல்லது குறைப்பதன் மூலம், 2032-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இது ஐரோப்பிய நிறுவனங்களுக்கு வரிகளின் மூலம் 4 பில்லியன் யூரோக்கள் சேமிப்பை ஏற்படுத்தும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ரஷ்ய எண்ணெய்க் கொள்முதலைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு இந்தியா மீது 25% வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவை ஏற்க பிரஸ்ஸல்ஸ் ஏன் தயங்கியது என்பதை இந்த ஒப்பந்தம் தெளிவுபடுத்துகிறது என்று ஸ்காட் பெசென்ட் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ரஷ்ய எண்ணெயின் இந்திய இறக்குமதியில் ஏற்பட்ட கணிசமான குறைவைத் தொடர்ந்து, இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள 25 சதவீத கூடுதல் அமெரிக்கத் வரிகளை நீக்குவதற்கான சாத்தியக்கூறுகளை பெசென்ட் கடந்த வாரம் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |