ஜேர்மன் தரப்பிலிருந்து உக்ரைனுக்கு மீண்டும் ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி
உக்ரைனின் நெருங்கிய கூட்டாளரான ஜேர்மனி தரப்பிலிருந்து, உக்ரைனுக்கு மீண்டும் ஏமாற்றமளிக்கும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
ஜேர்மன் தரப்பிலிருந்து உக்ரைனுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி
ஜேர்மனியின் 2024ஆம் ஆண்டு பட்ஜெட்டில் உக்ரைனுக்கு 7.5 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.
2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டிலோ, உக்ரைனுக்கான உதவி 7.5பில்லியன் யூரோக்களிலிருந்து 4 பில்லியன் யூரோக்களாக குறைக்கப்படுவதாக செய்தி வெளியானது நினைவிருக்கலாம்.
மீண்டும் ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி
இந்நிலையில், 2025ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஜேர்மன் பட்ஜெட்டில், உக்ரைனுக்காக நிதி எதுவும் ஒதுக்கப்படாது என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இனி, முடக்கப்பட்டுள்ள ரஷ்ய சொத்துக்களிலிருந்து கிடைக்கும் லாபம் போன்ற, வேறு வகையிலான வருவாயிலிருந்தே உக்ரைனுக்கு உதவுவதற்கான நிதி ஒதுக்கப்படும் என ஜேர்மனி தற்போது தெரிவித்துள்ளது.
ஜேர்மனி, உக்ரைனுக்கு அதிக அளவில் நிதி உதவி செய்துவரும் இரண்டாவது நாடாகும். ஏற்கனவே அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியானால் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் நிதி குறைக்கப்படலாம் அல்லது நிறுத்தப்படலாம் என வெளியாகியுள்ள செய்தியால் உக்ரைனில் அச்சம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |