காஸாவில் நடக்கக் காத்திருக்கும் பேரழிவு... சர்வதேச ஒத்துழைப்பிற்கு கோரும் பிரான்ஸ் ஜனாதிபதி
காஸாவில் தனது இராணுவ நடவடிக்கையை அதிகரிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதை, நடக்கக் காத்திருக்கும் பேரழிவு என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் சாடியுள்ளார்.
விரிவுபடுத்தும் முயற்சி
காஸாவின் நிலையை மேம்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையின் கீழ் ஒரு சர்வதேச கூட்டணியையும் அவர் முன்மொழிந்துள்ளார். கடந்த வாரம், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை காஸா நகரத்தைக் கட்டுப்பாட்டில் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது,
இந்த நகர்வு பாலஸ்தீனப் பகுதியில் அதன் இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் முயற்சியாக பார்க்கப்பட்டது. இஸ்ரேலின் இந்த முடிவு உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் கடும் விமர்சனத்திற்கு காரணமானது.
இந்த நிலையில், இஸ்ரேலின் முடிவை வன்மையாக கண்டித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், காஸா மற்றும் மவாசி முகாம்களில் இஸ்ரேல் அதன் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதாகவும், மீண்டும் ஆக்கிரமிப்பதாக இஸ்ரேலிய அமைச்சரவை அறிவித்திருப்பது,
முதன்மை இலக்காக
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான பேரழிவையும், முடிவில்லாத போரை நோக்கி நகர்வதையும் முன்னறிவிக்கிறது என்றார். மேலும், இஸ்ரேல் பிரதமரின் இந்த திட்டமானது காஸா மக்களையும் பணயக்கைதிகளையும் இலக்காக கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, காஸா பகுதியைப் பாதுகாப்பது, பொதுமக்களைப் பாதுகாப்பது மற்றும் குறிப்பிடப்படாத பாலஸ்தீன அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவது ஆகியவை ஐ.நா.வின் பணியின் முதன்மை இலக்காக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மேக்ரான் கூறியுள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இந்த பணியை நிறுவுவதில் பாடுபட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |