ரஷ்ய யூரல்ஸ் கச்சா எண்ணெய்... இந்தியாவிற்கு 10 டொலருக்கும் மேல் தள்ளுபடி
இந்தியத் துறைமுகங்களில் ரஷ்ய யூரல்ஸ் கச்சா எண்ணெய்க்கான தள்ளுபடிகள், டேட்டட் ப்ரென்ட் கச்சா எண்ணெய்க்கு எதிராக ஒரு பீப்பாய்க்கு 10 டொலருக்கும் மேல் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதிக விலையில் வர்த்தகம்
பலவீனமான சுத்திகரிப்பு நிலையத் தேவை மற்றும் ஏராளமான மாற்று விநியோகங்கள் ஆகியவற்றின் அழுத்தத்தமே முதன்மை காரணமாக கூறப்படுகிறது.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் தொடர்பான விநியோகத் தடைகள் காரணமாக, மார்ச் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், அதன் முக்கிய சந்தைகளான இந்தியாவிலும் சீனாவிலும் யூரல்ஸ் கச்சா எண்ணெய், ப்ரென்ட் கச்சா எண்ணெயை விட அதிக விலையில் வர்த்தகம் செய்யப்பட்டது.
மத்திய கிழக்கு மற்றும் ஈரானைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியை மீண்டும் தொடங்கியதால் அந்த ஆதரவு குறைந்துவிட்டது; இதனால் ஆசிய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்குப் பல்வேறு விநியோகத் தெரிவுகள் கிடைத்துள்ளதோடு, ரஷ்ய கச்சா எண்ணெய்க்கான தேவையும் தணிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் மாதம் இந்தியாவிற்கு விநியோகிக்கப்பட வேண்டிய யூரல்ஸ் சரக்குகள், சமீபத்தில் ஒரு பீப்பாய்க்கு 10 டொலர் அல்லது அதற்கும் அதிகமான தள்ளுபடியில் வர்த்தகம் செய்யப்பட்டன.
சீனாவும் இந்தியாவும்
இது அவற்றின் மிக உயர்ந்த நிலைகளுக்கு நெருக்கமாகவும், ஈரான் மோதலுக்கு முன்பு காணப்பட்ட நிலைகளைப் போன்றும் உள்ளது என தெரிய வந்துள்ளது.
மேலும், மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் கொள்முதலை சீனா அதிகரிப்பதால், அதன் கொள்முதல் குறைந்திருப்பதும் யூரல்ஸ் எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பெரும்பகுதியை சீனாவும் இந்தியாவும் இறக்குமதி செய்கின்றன.
இதற்கிடையில், சுத்திகரிப்பு உள்கட்டமைப்புகள் மீதான உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து உள்நாட்டு சுத்திகரிப்பு குறைந்ததால், ரஷ்யா யூரல்ஸ் ஏற்றுமதியை சாதனை அளவுகளுக்கு அதிகரித்துள்ளது. இதுவும் மிக அதிக தள்ளுபடி விலைக்கு காரணமாக அமைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |